டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆசைபட்டப்படி மீண்டும் பிரதமராகிட்டீங்க.. விஷயத்துக்கு வாங்க.. மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீர் உள்ளிட்ட, இரு நாடுகளுக்கு நடுவேயான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கோரிக்கைவிடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, மீண்டும் மோடியே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என கருத்து தெரிவித்தவர் இம்ரான் கான்.

அவர் ஆசைப்பட்டபடியே, மோடி மீண்டும் பிரதமராகியுள்ளார். இந்த நிலையில்தான், மோடிக்கு இம்ரான்கான், கடிதம் எழுதி பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்துள்ளதாக, அந்த நாட்டு பிரபல ஊடகமான ஜியோ டிவியில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆக்கிரமிப்பை ஆய்வு செய்ய வரமறுத்த விஏஓ.. தாம்பூலம் வைத்து அழைத்த திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஆக்கிரமிப்பை ஆய்வு செய்ய வரமறுத்த விஏஓ.. தாம்பூலம் வைத்து அழைத்த திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா

கடிதம்

கடிதம்

ஜியோ டிவி சேனல் வெளியிட்ட செய்தியில், இந்திய பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மோடிக்கு, இம்ரான் கான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாகவும், இரு நாட்டிலும் நிலவும் ஏழ்மையை, போக்கவும், இரு நாட்டு ஒத்துழைப்பை அதிகரிக்கவும் பேச்சுவார்த்தைதான் உதவும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம்

காஷ்மீர் விவகாரம்

காஷ்மீர் உட்பட இரு நாடுகள் நடுவேயான அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்க்க பாகிஸ்தான் விரும்புகிறது என்று அந்த கடிதத்தில் இம்ரான் கான் வலியுறுத்தி கேட்டுக் கொண்டதாக ஜியோ டிவி செய்தி மேலும் தெரிவிக்கிறது.

பயங்கரவாதம்

பயங்கரவாதம்

இம்ரான் கான் அழைப்புக்கு இந்தியா இதுவரை பதில் தரவில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தாதவரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து வருகிறது என்பதால், இம்ரான் கான் அழைப்பை இந்தியா பொருட்படுத்தப்போவதில்லை என டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தைக்கு மறுப்பு

பேச்சுவார்த்தைக்கு மறுப்பு

கிரிகிஸ்தானில் அடுத்த வாரம், நடைபெற உள்ள மண்டல உச்சிமாநாட்டில், பங்கேற்க வரும் இம்ரான்கானை, பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என இந்தியா அறிவித்த நிலையில், இம்ரான் கான் இவ்வாறு ஒரு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Pakistan Prime Minister Imran Khan has written to his Indian counterpart Prime Minister Narendra Modi saying that he wants talks to resolve all reconcilable problems, including the Kashmir issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X