டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் ஒரு மாதத்திற்குத் தேவையான கொரோனா தடுப்பூசியை.. ஒரே அடியாக ஏற்றுமதி செய்த மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் தற்போது தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா ஏற்றுமதி செய்த தடுப்பூசிகள் பெரும்பாலும் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளுக்கே அனுப்பப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

Recommended Video

    வல்லுனர்களின் பரிந்துரை குப்பையில் வீசப்படுகிறது.. இந்திய மருத்துவ சங்கம் காட்டம்

    இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டிருந்தாலும், 45+ உள்ளவர்களுக்கு மட்டுமே அப்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன.

    நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - ஈபிஎஸ், ஓபிஎஸ்.. சட்டசபை குழு தலைவர் பஞ்சாயத்தில் வெல்வது யார்?நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - ஈபிஎஸ், ஓபிஎஸ்.. சட்டசபை குழு தலைவர் பஞ்சாயத்தில் வெல்வது யார்?

    அப்போது செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷன், நாட்டில் விரும்பும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது நோக்கமல்ல, தேவைப்படும் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதே நோக்கம் எனக் கூறினார். இது அப்போது பெரும் சர்ச்சையானது.

    ஒரு மாதத்திற்குத் தேவையான தடுப்பூசி

    ஒரு மாதத்திற்குத் தேவையான தடுப்பூசி

    ஆனால், அதே நேரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகம் கொரோனா தடுப்பூசிகளை அண்டை நாடுகளுக்கும் வெளிநாடுகளுக்கும் தொடர்ந்து ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. அந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு, இந்தியாவைவிடக் குறைவாகவே இருந்தது. இது போல இந்தியா சுமார் 6.6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. இது இந்தியாவில் ஒரு மாதம் காலம் தடுப்பூசி செலுத்த போதுமானதாகும். மேலும், கொரோனா உச்சத்தில் இருக்கும் டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் உள்ள அனைவருக்கும் இதை வைத்து தடுப்பூசி செலுத்த முடியும்.

    93 நாடுகளுக்குச் சென்ற தடுப்பூசி

    93 நாடுகளுக்குச் சென்ற தடுப்பூசி

    இந்தியாவிலிருந்து 93 நாடுகளுக்குத் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டன. அதில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு மோசமானதாக இல்லை. இருந்தாலும், சுமார் 60% கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி அந்த நாடுகளுக்கு மட்டுமே சென்றன. தொடக்கக் காலத்தில் இந்தியாவின் இந்த அணுகுமுறையை அனைவரும் பாராட்டினர். ஆனால், கொரோனா 2ஆம் அலை பரவ தொடங்கியதுமே, இந்தியாவில் தடுப்பூசிக்குப் பற்றாக்குறை நிலவியது. இது தடுப்பூசி ஏற்றுமதி குறித்த கேள்விகளை எழுப்பியது.

    பொறுமையாகச் செய்திருக்கலாம்

    பொறுமையாகச் செய்திருக்கலாம்

    இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தடுப்பூசி போதிய கையிருப்பில் இல்லாத நிலையிலும், கொரோனா அதிகரித்து வரும் நிலையிலும், ஏற்றுமதி செய்ய எந்த அவசரமும் இல்லை. ஏற்றுமதியின் பெரும்பகுதி வணிக ஒப்பந்தங்கள் அடிப்படையிலும் GAVIக்கும் (உலகளாவிய தடுப்பூசி கூட்டணி) தான் அனுப்பப்பட்டது. இந்த நாடுகளுக்குத் தடுப்பூசி கிடைக்க வேறு வழிகளில் தடுப்பூசி கிடைக்க வாய்ப்புகள் குறைவே. ஆனால் படிப்படியாகத் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்திருக்கலாம் என்றார்.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையில் முதலில் மும்பை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியது. முதலில் 70 ஆயிரத்தைத் தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்க நான்கு லட்சத்தைக் கடந்தது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த போதும், நாட்டில் உயிரிழப்புகள் மிகக் குறைவாகவே உள்ளதாகவும் தடுப்பூசி ஏற்றுமதியை நியாயப்படுத்தும் வகையிலேயே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருந்தார்.

    ஏற்றுமதி குறைப்பு

    ஏற்றுமதி குறைப்பு

    சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனும் கூட, பல்வேறு நாடுகளைப் போல இல்லாமல் நாட்டில் கொரோனா தடுப்பூசி சீராகவே கிடைப்பதாகவும் தடுப்பூசி பெறச் சிரமப்படும் நாடுகளுக்கு அதை வழங்குவதில் தவறு இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர்கள் அப்படிச் சொல்லி சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை பல மடங்கு அதிகரித்து. அதன் பின்னரே ஏற்றுமதி குறைக்கப்பட்டது.

    பாதிப்பு குறைவு

    பாதிப்பு குறைவு

    இந்தியாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசியைப் பெற்ற பெரும்பாலான நாடுகளில் வைரஸ் பாதிப்பு மோசமாக இல்லை. உலகின் பல முன்னணி நாடுகளுமே தங்கள் நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி அதிகளவில் கிடைப்பதை உறுதி செய்துள்ளன. அதன் பின்னரே பிற நாடுகளுக்குத் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவிலும் தடுப்பூசி ஏற்றுமதிக்குச் சரியான நடைமுறையைப் பின்பற்றி இருந்தால், தடுப்பூசிக்கு இந்தளவு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது.

    English summary
    Corona vaccine exports to various countries.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X