டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திங்கள் வரை காவலில் இருக்கிறேன்.. நீதிமன்றத்தில் சொன்ன ப.சிதம்பரம்.. பின்னணியில் அல்டிமேட் காரணம்!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னை திங்கள் கிழமை வரை சிபிஐ காவலில் வைத்து இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    P Chidambaram Case: Now its CBI and ED turn to reply

    டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னை திங்கள் கிழமை வரை சிபிஐ காவலில் வைத்து இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு, இதனுள் நிறைய உள்வழக்குகள் இருப்பதும், நிறைய புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதும் கண்டிப்பாக தெரியும். இந்த வழக்கில் ப. சிதம்பரம் தரப்பில் மொத்தம் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    முதல்மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் தரப்பு மனுதாக்கல் செய்துள்ளது. இதில் ப. சிதம்பரத்தை வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தமிழர்களின் வரலாற்றை பறைசாற்ற திட்டம்.. கடல் அகழாய்வில் களமிறங்கும் தொல்லியல் துறை.. அதிரடி முடிவு! தமிழர்களின் வரலாற்றை பறைசாற்ற திட்டம்.. கடல் அகழாய்வில் களமிறங்கும் தொல்லியல் துறை.. அதிரடி முடிவு!

    எப்போது

    எப்போது

    அதற்கு அடுத்தபடியாக இன்னொரு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐ கைதுக்கு எதிராக ஜாமீன் கேட்டு ப. சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதும் செப்டம்பர் 5ம் தேதிதான் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது,

    சிபிஐ

    சிபிஐ

    இது இல்லாமல் ஐஎன்எக்ஸ் வழக்கில் தனக்கு காவல் வழங்கப்பட்டதே தவறு. சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தனக்கு காவல் கொடுத்ததே தவறு என்று கூற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை திங்கள் அல்லது செவ்வாய் கிழமை நடக்க உள்ளது.

    சிபிஐ காவல்

    சிபிஐ காவல்

    இந்த நிலையில் சிபிஐ காவலுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை திங்கள் கிழமை நடக்கும் என்பதால் அன்று வரை சிபிஐ காவலில் இருக்க தயார் என்று ப. சிதம்பரம் தரப்பு கூறியுள்ளது. சிபிஐ காவலுக்கு எதிரான வழக்கில் திங்கள் கிழமை விசாரணை நடக்கும், அதுவரை என்னை விசாரிக்கட்டும், அதன்பின் மொத்தமாக நான் வெளியே வந்து கொள்கிறேன், அதுவரை காவலில் இருக்கிறேன் என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    இதற்கு காரணம் இருக்கிறது. இன்று சிபிஐ கோர்ட்டில் ப. சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுகிறார். அவருடைய காவல் இன்றோடு முடிகிறது. ஒருவேளை சிபிஐக்கு இன்று காவலை நீட்டிக்க அனுமதி கிடைக்கவில்லை என்றால் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்படுவார். ஆம் சிபிஐ காவலும் இல்லாத, பெயிலும் இல்லாத நிலையில் அவர் சிறை செல்வார். நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அவர் அடைக்கப்படுவார்.

    ஓ இதுதான் காரணமா?

    ஓ இதுதான் காரணமா?

    இந்த நிலையில் திஹார் சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக ப. சிதம்பரம் சிபிஐ காவலிலேயே தொடர முடிவு எடுத்துள்ளார் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இன்று சிபிஐ கோர்ட்டிலும் ப. சிதம்பரம் தரப்பு இதே கோரிக்கையையே வைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    English summary
    In Media Case: P Chidambaram says that he will be in custody till Monday - The real reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X