டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பனிமூட்டம்.. காற்று மாசு! விளைவு… ட்ரெயின், ப்ளைட் எல்லாம் கேன்சல்.. இது டெல்லி நிலவரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியில் கடும் பனிப்பொழிவு... விமானம், ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு-வீடியோ

    டெல்லி:காற்று மாசுடன் கடும் பனிமூட்டமும் சேர்ந்துள்ளதால், டெல்லி ரயில் நிலையத்தில் 15 ரயில்கள் தாமதமாகியுள்ளது. 29 விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வடமாநிலங்களில் முன் எப்போது இல்லாத அளவுக்கு தற்போது குளிர் வாட்டி வருகிறது. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது.

    In north india, including delhi, again a mist and fog, 29 aircrafts and 10 trains delay

    இதே போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலைமை நீடித்து வருவதால் ரயில்கள் டெல்லியை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில் நிலையத்தில் இருந்தும் ரயில்கள் புறப்பட முடியவில்லை. சுமார் 15 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.

    ரயில் சேவையோடு விமான போக்குவரத்தும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 70 விமானங்கள் தரையிறங்கும் தலைநகர் டெல்லியில் 29 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    In north india, including delhi, again a mist and fog, 29 aircrafts and 10 trains delay

    குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியசாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பனி மூட்டத்துடன் காற்று மோசம் அடைந்துள்ளது. டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    English summary
    In Delhi, nearly 15 trains are running late due to foggy weather conditions and low visibility.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X