டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேள்வி கேட்கத்தான் நினைக்கிறேன்.. ஆனால்.. லோக்சபாவில் ராகுல் காந்தி ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கேள்வி கேட்கத்தான் நினைக்கிறேன்.. லோக்சபாவில் ராகுல் காந்தி ஆவேசம்

    டெல்லி: நான் மத்திய அரசை, கேள்வி கேட்க விரும்புகிறேன், ஆனால் கேட்காமல் இருக்கிறேன், ஏனெனில் இங்கு ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்று, காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி லோக்சபாவில், தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா அரசியல் நிலவரத்திற்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் தொடர்ச்சியாக முழக்கங்கள் எழுப்பியதால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா, நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

    In Parliament, Rahul Gandhi refused to raise question

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், நாடாளுமன்ற வளாகத்திலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் நேர விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது.. முகுல் ரோத்தகிநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் நேர விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது.. முகுல் ரோத்தகி

    இதனிடையே லோக்சபாவில், பேசிய ராகுல் காந்தி, நான் இந்த சபையில் கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன், ஆனால் மகாராஷ்டிராவில் ஜனநாயகம் கொல்லப்பட்டுள்ளது. எனவே, நான் கேள்வி கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.

    காங்கிரஸ், சிபிஐ (எம்) மற்றும் பிற எதிர்க்கட்சிகள் மகாராஷ்டிரா பிரச்சினை குறித்து இரு அவைகளிலும் விவாதிக்கக் கோரியுள்ளன. லோக்சபாவில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் கொறடா, சுரேஷ் ஆகியோர் மகாராஷ்டிராவின் அரசியல் நிலைமை குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தில் பேச நோட்டீஸ் கொடுத்தனர்.

    குளிர்கால அமர்வின் ஆறாவது நாளான இன்று. மத்திய அரசு ஒரு முக்கியமான நிதி மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, வருமான வரிச் சட்டம் 1961 ஐ திருத்துவதற்கான மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்த கூடும். இ-சிகரெட் தடை குறித்து அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா குறித்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரா நிலவரத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு காட்டி வருவதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    English summary
    Congress leader Rahul Gandhi says it doesn't make any sense to question the centre over the political situation in Maharashtra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X