டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொத்து கொத்தாக சிக்கிய ஹவாலா பணம்.. டெல்லி ஐடி ரெய்டில் ரூ.25 கோடி பறிமுதல்!

டெல்லியில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் முடிவில் மொத்தம் 25 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் முடிவில் மொத்தம் 25 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

டெல்லியில் இன்று காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 100 இடங்களில் சோதனை செய்தனர். ஹவாலா பணம் பெரிய அளவில் பதுக்கப்பட்டு இருக்கிறது என்று வந்த தகவலை அடுத்து இந்த சோதனை நடந்தது.

இதில் பலகோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

எவ்வளவு

எவ்வளவு

இந்த சோதனை சில தனியார் லாக்கர்களிலும் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் மொத்தமாக கணக்கில் வராத 25 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் மொத்தமும் ஹவாலா பணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாருடையது

யாருடையது

டெல்லியை சேர்ந்த புகையிலை பொருள் நிறுவன முதலாளிகள், கெமிக்கல் நிறுவன முதலாளிகள், உலர் கனிகள் நிறுவன முதலாளிகள் ஆகியோரின் நிறுவனத்தை சேர்ந்த ஹவாலா பணம் இது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

முக்கிய தொடர்பு

முக்கிய தொடர்பு

இது துபாயை சேர்ந்த வியாபாரி பங்கஜ் கபூருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே 3700 கோடி ரூபாய் மோசடி செய்து வழக்கை சந்தித்து வருகிறது. அவருக்கும் இந்த பண பதுக்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

லாக்கரில் பணம்

லாக்கரில் பணம்

லாக்கர்களின் பதுக்கிவைக்கப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். டெல்லியில் 700 கோடி ரூபாயும், மும்பையில் 30 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே வருடத்தில் இத்தனை பறிமுதல்கள் நடந்துள்ளது.

English summary
Income tax department raids 100 plus places in Delhi and siezed Rs.25 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X