டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆம்புலன்ஸ்...நியாயமான கட்டணம் நிர்ணயிக்க... மாநிலங்களுக்கு...உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

Google Oneindia Tamil News

டெல்லி: பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆம்புலன்ஸ்க்கு அதிகமான கட்டணம் வசூலிப்பதாகவும், ஆம்புலன்ஸ் சேவை குறைவாக இருப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து நியாயமான கட்டணத்தை மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநிலங்களில் இயங்கும் ஆம்புலன்ஸ்கள் கொரோனாவை பயன்படுத்தி மக்களிடம் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மேலும், கூடுதல் ஆம்புலன்ஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

Increase the Ambulance and fix the reasonable fee ordered by SC to State governments

இதுதொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ''மாநிலங்கள் ஆம்புலன்ஸ் சேவையை அதிகரிக்க வேண்டும். கொரோனா தொற்று இருக்கும் நிலையில் ஆம்புலன்ஸ் தேவை அதிகரிக்கும்.

பூ ஒன்று புயலாக மாறியது... சர்..சர்... டுர்..டுர்... பைக் ஆம்புலன்ஸ் ஓட்டி அசத்திய ரோஜா..! பூ ஒன்று புயலாக மாறியது... சர்..சர்... டுர்..டுர்... பைக் ஆம்புலன்ஸ் ஓட்டி அசத்திய ரோஜா..!

மேலும் அதிகமாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன. எனவே மாநில அரசுகள் நியாயமான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும். மத்திய அரசு ஏற்கனவே இதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அவற்றை பின்பற்ற வேண்டும். போதிய ஆம்புலன்ஸ் சேவையை உறுதிபடுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆம்புலன்ஸ் சேவை வழங்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

English summary
Increase the Ambulance and fix the reasonable fee ordered by SC to State governments
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X