டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா 2வது அலையால் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் பாதிப்பு அதிகரிப்பு - ஐசிஎம்ஆர்

கொரோனா இரண்டாம் அலையின் போது கர்ப்பிணிப் பெண்களிடையே இறப்பு விகிதம் 5.7 சதவீதமாக இருந்தது. முதல் அலைகளில் 0.7 சதவீதத்துடன் ஒப்பிடும்போது பலமடங்கு அதிகம் என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி : கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலையில் கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் இரண்டு கோவிட் -19 அலைகளின் பாதிப்பு தொடர்பாக ஐசிஎம்ஆர் நடத்திய ஒப்பீட்டு ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கொரோனா முதல் அலைகளின் போது கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களிடையே பாதிப்பு 14.2 சதவிகிதமாக இருந்ததாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Pregnancy, Periods இருக்கு போது பெண்கள் VACCINE எடுக்கலாம் | Dr.Karthika தெளிவான விளக்கம்

    கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டினை தனது கைப்பிடிக்குள் வைத்திருந்தது. உலக நாடுகள் லாக்டவுனை அறிவித்தன. கொரோனா சற்றே கட்டுப்பட்டது.

    2021ஆம் ஆண்டு கொரோனா இரண்டாவது அலை வீரியத்தோடு தாக்கத் தொடங்கியது. இதில் சிறார்கள், பச்சிளம்குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். பல பச்சிளம் குழந்தைகள் தங்களின் பெற்றோரை இழந்தனர். பல சிறுவர்கள் மரணமடைந்தனர்.

    Increased risk of corona 2nd wave in pregnant women and nursing mothers - ICMR

    இந்தியாவில் முதல் இரண்டு கொரோனா அலைகளின் பாதிப்பு தொடர்பாக ஐசிஎம்ஆர் ஆய்வு நடத்தி ஒப்பீடு செய்துள்ளது. இரண்டாவது அலையின் போது 28.7 சதவிகிதமாக அதிகரித்திருந்தது.

    இரண்டாம் அலையின் போது கர்ப்பிணிப் பெண்களிடையே இறப்பு விகிதம் 5.7 சதவிகிதமாக இருந்தது. முதல் அலைகளில் 0.7 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது பலமடங்கு அதிகம் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
    கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களிடையே தடுப்பூசியின் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

    மருத்துவ பரிசோதனைகளின் தரவு இல்லாததால் அத்தகைய பெண்களுக்கு தடுப்பூசி போட அரசாங்கம் இன்னும் அனுமதிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக, இரண்டு அலைகளின் போதும் 2% கர்ப்பிணிகளின் இறப்பு மதிப்பிடப்பட்டன.

    இதற்கிடையில், கடந்த வாரம் வெளியான ஒரு அறிக்கையில் முன்னுரிமை அடிப்படையில் கர்ப்பிணிகளுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என ஒரு வலுவான கருத்தை வலியுறுத்தியது.
    கர்ப்பிணி அல்லாத பெண்களுடன் ஒப்பிடும்போது கர்ப்பிணிப் பெண்கள் கடுமையான கொரோனா வைரஸ் தொடர்பான சிக்கல்களுக்கு பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக அறியப்படுவதால், அத்தகைய பெண்களைப் பாதுகாப்பதில் இருக்கும் பிரச்சனையை கவனிப்பது முக்கியமானது.

    அமெரிக்கா செல்லும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டியது கட்டாயமல்ல - வெளியுறவு அமைச்சகம் அமெரிக்கா செல்லும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டியது கட்டாயமல்ல - வெளியுறவு அமைச்சகம்

    கடுமையான கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி நம்பகமான பாதுகாப்பு வழங்கும் என்று அறிக்கை குறிப்பிட்டது. கொரோனா அதிகம் பாதித்த முதல் 20 நாடுகளில், சுமார் ஒன்பது நாடுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்கின்றன. அவற்றில் இரண்டு நாடுகள் முன்னுரிமை முறையில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட அனுமதித்துள்ளன.

    அதே நேரத்தில் இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் தடுப்பூசிக்கு கர்ப்பிணிப் பெண்களை சேர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளன. கொரோனா வைரஸ்க்கு எதிராக கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    It has been found that pregnant women and children are more affected by the second wave than the first wave by the corona. This was revealed in a comparative study conducted by ICMR on the impact of the first two Covid -19 waves in India. The risk among pregnant women and breastfeeding women during the first waves of corona was 14.2 percent, according to the ICMR.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X