டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெல்லச் சாகிறோம்.. என்னவாகப் போகிறோம்.. எங்கெங்கும் மாசு.. என்ன செய்யப் போறோம் பாஸு!

Google Oneindia Tamil News

Recommended Video

    தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு... என்ன செய்ய போகிறோம்?- வீடியோ

    டெல்லி: இந்தியாவின் குர்கான் நகரம்தான் உலகிலேயே மிகப் பெரிய மாசடைந்த நகராக தெரிய வந்துள்ளது. அந்த அளவுக்கு குர்கான் நகரில் மாசு மண்டிப் போய்க் கிடக்கிறதாம்.

    குர்கான் என்றில்லை இன்று உலகின் எந்தப் பகுதியுமே மாசு மருவற்றதாக இல்லை என்பதே உண்மை. அந்த அளவுக்கு பூமியை கெடுத்து குட்டிச் சுவராக்கி நாசமாக்கி வைத்துள்ளான் மனிதன்.

    ஐக்யூஏர் ஏர் விஷூவல் மற்றும் கிரீன்பீஸ் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வறிக்கையைப் படித்தால் இதயமே ஆடிப் போகிறது. அந்த அளவுக்கு உலக அளவில் மாசு பட்ட நகரங்களின் எண்ணிக்கை உள்ளது.

    ரொம்ப மோசம்

    ரொம்ப மோசம்

    உலகிலேயே மாசு அதிகம் உள்ள நகரம் இந்தியாவின் குர்கான் நகரம்தான். தேசிய தலைநகர பிராந்தியத்திற்குட்பட்ட நகரம்தான் குர்கான். இங்குதான் அதிக அளவில் காற்று மாசு இருக்கிறதாம்.

    11வது இடத்தில் டெல்லி

    11வது இடத்தில் டெல்லி

    தலைநகர் டெல்லி இந்த வரிசையில் 11வது இடத்தில் இருக்கிறது. டெல்லியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் புகை மாசால் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஆனால் அவர்களை விட குர்கான் மக்கள் பாவப்பட்டவர்களாக உள்ளனர் என்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    மாசில் மோசம் இந்தியா

    மாசில் மோசம் இந்தியா

    உலக அளவில் மாசு பாதிப்புக்குள்ளான 20 நகரங்களில் 15 இந்திய நகரங்கள் என்பது இன்னொரு அதிர்ச்சித் தகவல். அதிலும் அதிக அளவில் மாசு உள்ள டாப் 10 நகரங்களில் 7 இந்தியாவில் உள்ளது. பாகிஸ்தான் சீனா பரவாயில்லை . சீனாவில் ஒரு நகரமும், பாகிஸ்தானில் 2 நகரமும் இந்த லிஸ்ட்டில் வருகின்றன.

    தமிழ்நாடு பரவாயில்லை

    தமிழ்நாடு பரவாயில்லை

    டாப் 10 மோசமான நகரங்களில் வரும் 7 இந்திய நகரங்கள் - குர்கான், காஸியாபாத், பரீதாபாத், பிவாடி, நொய்டா, பாட்னா, லக்னோ ஆகியவை. சீனாவில் ஹோட்டான், பாகிஸ்தானில் லாகூர், பைசலாபாத் ஆகியவை.

    பயங்கர நோய்கள் வரும்

    பயங்கர நோய்கள் வரும்

    மாசு அதிகம் இருக்கும் காரணத்தால் நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம், சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட நோய்கள் அதிகரிக்கும் அபாயம் இந்த நகரங்களில் வசிப்போருக்கு அதிகம் உள்ளன. குறிப்பாக ஆஸ்துமா பாதிப்பு அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளது.

    3000 நகரங்களில் ஆய்வு

    3000 நகரங்களில் ஆய்வு

    உலகம் முழுவதும் 3000 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 64 சதவீத நகரங்கள் உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள மாசு அளவை விட அதிகம் மாசடைந்துள்ளனவாம். இதில் தெற்கு ஆசிய நகரங்கள்தான் மிகவும் மோசமான பாதிப்பில் உள்ளனவாம்.

    English summary
    Gurgaon is the most polluted city in the world according to a report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X