டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

6ஆம் தேதி ராணுவ தரப்பில் பேச்சுவார்த்தை.. எல்லையில் பின்வாங்கிய இந்திய-சீன படைகள்

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் பிரச்சினையை தீர்க்கும் வகையில் இந்தியா- சீனா ஆகிய நாடுகளின் ராணுவத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் சீன படைகள் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து 2 கி.மீ. பின்வாங்கிச் சென்றன. அது போல் இந்திய படைகளும் ஒரு கிலோ மீட்டர் பின்வாங்கிச் சென்றுள்ளன.

இந்திய எல்லை பகுதியில் கிழக்கு லடாக் பகுதியில் சாலை அமைத்தது தொடர்பாக சீனா எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. ஒரு பக்கம் லடாக் பகுதியில் இரு படைகளும் தாக்கிக் கொண்டன.

India and China military will hold talks, Chinese retreat in Galwan

இதையடுத்து கால்வன் பள்ளதாக்கு பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் தங்கள் படைகளை குவித்தன. சீனா போர் விமானங்கள், ஆயுதங்களையும் குவித்தது.

இந்த நிலையில் நாளை மறுநாள் ஜூன் 6-ஆம் தேதி இந்தியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் 14 Corps கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் தலைமை தாங்குகிறார்.

நாள் குறித்த ராணுவம்.. லடாக் எல்லையில் நாள் குறித்த ராணுவம்.. லடாக் எல்லையில் "லெப்டினன்ட் ஜெனரல்" அதிகாரிகள் மீட்டிங்.. முக்கிய திருப்பம்!

இந்த பேச்சுவார்த்தையின் போது பங்காங் சோ லேக் பகுதியில் நடந்த மோதல் குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இரு படைகளும் சற்று பின்வாங்கிச் சென்றுள்ளன.

அதாவது சீன படை கால்வன் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டரும், இந்திய படைகள் ஒரு கிலோ மீட்டரும் பின்வாங்கிச் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

English summary
Indian and Chinese troops retreat in Galwan for 2 kms and 1 km respectively as the army officials going for talks the day after tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X