டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வார் கேம்".. சீறிப்பாய்ந்த போர் ஜெட்கள்.. அரபிக்கடலில் இந்தியா, அமெரிக்காவின் மாஸ் மலபார் பயிற்சி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகள் மேற்கொள்ளும் கடற்படை கூட்டு பயிற்சியான மலபார் கடற்படை பயிற்சி இன்று அரபிக்கடலில் நடந்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் ஒன்றாக சேர்ந்து கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நான்கு நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு மலபார் கடற்படை பயிற்சி என்று பெயர்.

இந்த மலபார் கடற்படை பயிற்சியின் 24வது பயிற்சி தற்போது நடந்து வருகிறது. 2007க்கு பின் முதல்முறையாக இந்த பயிற்சியில் ஆஸ்திரேலியா மீண்டும் கலந்து கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் எந்த ராணுவ தாக்குதலும் நடக்கவில்லை.. இந்திய ராணுவம் விளக்கம்!ஜம்மு காஷ்மீர் எல்லையில் எந்த ராணுவ தாக்குதலும் நடக்கவில்லை.. இந்திய ராணுவம் விளக்கம்!

விஷாகப்பட்டினம்

விஷாகப்பட்டினம்

இந்த மலபார் கடற்படை பயிற்சியின் முதல்கட்ட கூட்டு பயிற்சி கடந்த 3ம் தேதி விஷாகப்பட்டினம் கடல் பகுதியில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட பயிற்சி அரபிக்கடல் பகுதியில் நடந்து வருகிறது. இன்று அரபிக்கடலில் நடந்த பயிற்சியில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு கடற்படையின் போர் விமானங்கள் பயிற்சி மேற்கொண்டது.

போர் விமானங்கள்

போர் விமானங்கள்

இரண்டு நாட்டு கடற்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டது. விமானங்களை துரத்துவது, குறி வைத்து தாக்குவது, தாக்குதலில் இருந்து தப்பிப்பது, போர் கப்பல்களை தாக்கி அழிப்பது என்று பல கட்ட பயிற்சிகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.

போர் விமானம்

போர் விமானம்

இந்திய ராணுவம் சார்பாக இதில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர் கப்பல் கலந்து கொண்டது. அந்த கப்பலுக்கு சொந்தமான் மிக் 29கே விமானமும், பி-8i விமானமும் இதில் பயிற்சி மேற்கொண்டது. அமெரிக்காவின் போர் கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் இதில் கலந்து கொண்டது. அந்த கப்பலுக்கு சொந்தமான F-18, E2C விமானங்கள் இன்று பயிற்சியில் ஈடுபட்டது.

தீவிரம்

தீவிரம்

இந்த பயிற்சி சுமார் 6 மணி நேரம் தீவிரமாக நடந்தது. அதேபோல் ஆஸ்திரேலியா சார்பாக HMAS Ballarat மற்றும் ஜப்பான் சார்பாக JS Murasame ஆகிய போர் கப்பல்கள் இன்று பயிற்சி மேற்கொண்டது. இதனால் ஆரம்பிக்கடலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. வரும் 20ம் தேதி நான்கு நாடுகளும் ஒன்றாக இங்கு கூட்டு பயிற்சி மேற்கொள்ள உள்ளது.

English summary
India and The US navy's air assets did Malabar Exercise in the Arabian Sea today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X