டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க ராணுவ சாட்டிலைட் உதவி, இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.. எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவின் ராணுவ செயற்கைக்கோள் புகைப்படங்களை, உடனுக்குடன் பெறுவதற்கு ஏற்பாடு செய்யும் வகையிலான ஒப்பந்தத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா இன்று கையெழுத்திட்டது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் அந்த நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பர், ஆகியோர், நேற்று, இந்தியா வருகை தந்தனர். அவர்கள் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை நடத்தினார்.

2018 ஆம் ஆண்டு முதல் இது போல இவ்விரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். 2+2 மீட்டிங் என்று இந்த ஆலோசனைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கான... ரெம் டெசிவர் மருந்துக்கு அமெரிக்கா முழு ஒப்புதல்...!கொரோனா சிகிச்சைக்கான... ரெம் டெசிவர் மருந்துக்கு அமெரிக்கா முழு ஒப்புதல்...!

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இன்றைய சந்திப்பின்போது, பல்வேறு முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் ஒரு ஒப்பந்தம் தான் அமெரிக்காவின் ராணுவ செயற்கைக்கோள் வசதியை இந்தியா பெற்றுக் கொள்ளும் என்ப.து உடனுக்குடனான செயற்கைக்கோள் படங்கள், ரகசியமான தகவல்கள் போன்றவற்றை அமெரிக்கா ராணுவத்திடம் இருந்து இந்தியா பெற்றுக் கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் ஏற்பாடு செய்யும். எனவே, எதிரிகள் நடமாட்டத்தை அறிந்து ஏவுகணைகள், ட்ரோன் மூலம் துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். லடாக்கில் சீனா தொல்லை செய்யும் நிலையில் இந்த ஒப்பந்தம் முக்கியமானது.

அமைச்சர்கள் திருப்தி

அமைச்சர்கள் திருப்தி

அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ராஜ்நாத் சிங் மற்றும் மார்க் எஸ்பர் ஆகிய இருவரும் இந்த ஒப்பந்தத்தில் திருப்தி அடைந்து உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

மூன்றாவது சந்திப்பு

மூன்றாவது சந்திப்பு

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான 2 ப்ளஸ் 2 பேச்சுவார்த்தைகள், 2018ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்றது. இரண்டாவது சந்திப்பு 2019ஆம் ஆண்டு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது. தற்போது இந்தியாவில் இந்த சந்திப்பு நடக்கிறது.

 மலபார் பயிற்சி

மலபார் பயிற்சி

இதனிடையே அடுத்த மாதம் நடைபெற உள்ள மலபார் கடற்பயிற்சியில், ஆஸ்திரேலியா பங்கேற்ற உள்ளதற்கு மார்க் எஸ்பர் வரவேற்பு தெரிவித்துள்ளார். 1992 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் இந்திய கடற்படையினர் இணைந்து மலபார் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்த பயிற்சியில் இணைய உள்ளனர்.

English summary
India will get access of data and images on real time basis from United States military satellites under an agreement to be signed during on ongoing visit of secretary of state Mike Pompeo on defence secretary Mark Esper.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X