டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு மாதமாக பகிரப்பட்ட உளவுத்தகவல்.. அமெரிக்கா அனுப்பிய மெசேஜ்.. இந்தியாவிற்கு கிடைத்த அதிரடி உதவி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவும் அமெரிக்காவும் இதுவரை இல்லாத அளவாக கடந்த மாதத்தில் உளவுத்துறை மற்றும் இராணுவ ஒத்துழைப்பு தகவல்களை தீவிரப்படுத்தியுள்ளன,

இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு லைனில் மோதல் ஏற்பட்டது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் ஏற்பட்டது. இந்த மோதல்களுக்கு மத்தியில் இந்தியாவும் அமெரிக்காவும் அமைதியாக உளவுத்தகவல்களை பகிர்வது மற்றும் ராணுவ ஒத்துழைப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இது 11 வாரங்களாக நடந்து வருகிறது -

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக்கேல் ஆர் பாம்பியோ ஜூன் மூன்றாவது வாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேசிய பின்னர், இந்த ஒத்துழைப்பு மிகவும் அதிகரித்துள்ளது. இரண்டு பேரும் உயர்மட்ட அளவில் தொலைபேசியில் உரையாடல்கள் நடத்தி இருக்கிறார்கள்.

கந்தனுக்கு அரோகரா.. எம்மதமும் சம்மதமே.. தமிழக அரசுக்கு நன்றி... ரஜினி போட்ட திடீர் டிவீட்!கந்தனுக்கு அரோகரா.. எம்மதமும் சம்மதமே.. தமிழக அரசுக்கு நன்றி... ரஜினி போட்ட திடீர் டிவீட்!

ராணுவ தளபதி உரையாடல்

ராணுவ தளபதி உரையாடல்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், அமெரிக்க பிரதிநிதி ராபர்ட் சி ஓ'பிரையனுடன் பேசியிருக்கிறார். அதே நேரத்தில் அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் மார்க் ஏ மில்லி, இந்திய ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத்துடன் கடந்த சில வாரங்களாக உரையாடி உள்ளார். இந்த உரையாடல்கள் இரு நாடுகளின் பாதுகாப்பு, இராணுவ மற்றும் உளவுத்துறை பிரிவுகளுக்கு இடையில் தகவல்கள் பகிர்வுக்கு உதவியுள்ளன.

ஜெய்சங்கர் பேச்சு

ஜெய்சங்கர் பேச்சு

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக்கேல் பாம்பியோ மற்றும்ஜெய்சங்கருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் தான் உண்மையில் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்து அரசியல் உந்துதலைக் கொடுத்தது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் மார்க் டி எஸ்பர் ஜூலை இரண்டாவது வாரத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

செயற்கைகோள் படங்கள்

செயற்கைகோள் படங்கள்

இந்தியா அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு காரணமாகவே உயர்தர செயற்கைக்கோள் படங்கள், தொலைபேசி இடைமறிப்புகள் மற்றும் சீன துருப்புக்களின் தரவு போன்றவற்றை அமெரிக்கா பகிர்ந்தது. இதனால் சீனா உடனான உண்மையான கட்டுப்பாட்டு லைன் முழுவதும் படைகளை இந்தியா குவித்தது. தற்போது எல்லை கட்டுப்பாட்டு கோடு முழுவதிலும் சீனாவின் செயல்பாடுகளை இந்தியா கவனித்து வருகிறது.

ராணுவ விமானங்கள்

ராணுவ விமானங்கள்

திங்கள்கிழமை அன்று , யுஎஸ்எஸ் நிமிட்ஸ் மற்றும் இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் வான் பாதுகாப்பு உள்ளிட்ட போர்பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளன. தற்போது இந்தியப் பெருங்கடலில் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் கப்பல் இந்தியாவிற்கு ஆதரவாக நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு புறம் எனில் அமெரிக்க உபகரணங்கள் இந்திய பாதுகாப்பு துறையின் திறனை அண்மைக்காலத்தில் மேம்படுத்தியுள்ளன. கிழக்கு லடாக்கில் இந்திய ஆயுதப்படைகள் ஐந்து அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களை பயன்படுத்தின.

Recommended Video

    எல்லையை கண்காணிக்க மாஸ் திட்டம்.. ராணுவத்திற்கு வழங்கப்பட்ட Bharat drones
    ரகசியம் காத்தன

    ரகசியம் காத்தன

    கால்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதல்களில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு ஜெய்சங்கருடன் அமெரிக்காவின் பாம்பியோ பேசியிருந்தார். அந்த நேரத்தில் இந்தியா மற்றும் சீனா இடையே இராஜதந்திர மற்றும் இராணுவ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததால், இந்தியாவும் அமெரிக்காவும் யுக்தி சார்ந்த காரணங்களுக்காக பேசியதை பகிரங்கப்படுத்தவில்லை. ஆனால் உளவு தகவல்களை பகிர்வது, ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் அமெரிக்கா இந்தியா இடையே ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளது. சீனாவை எதிர்க்க இந்தியாவிற்கு பல்வேறு வகையில் அமெரிக்கா உதவியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    English summary
    India and the US have intensified intelligence and military collaboration and cooperation at an unprecedented level, more so in the last month.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X