டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எங்களோட எல்லைகளை தப்பா காட்டிருக்கீங்க".. சவூதி அரேபியாவை எச்சரித்த இந்தியா!

சவுதி அரேபியாவை இந்தியா எச்சரித்துள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா குறித்த ஒரு வரைபடத்தில் நமது நாட்டின் எல்லைகள் குறித்து தவறான வரைபடம் இடம் பெற்றிருப்பதாக சவூதி அரேபியாவிடம் இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது.

இது மிகவும் தவறானது என்றும் இதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் சவூதி அரசிடம் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 India ask Saudi to correct the borders of the nation in its new banknote

சவூதி அரேபிய அரசு புதிதாக 20 ரியால் வங்கி நோட்டை வெளியிட்டுள்ளது... இதில் உலக வரைபடம் இடம் பெற்றுள்ளது.. அதில் இந்தியாவின் எல்லை தவறாக குறிப்பிடப்ட்டுள்ளது. அதாவது ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவுக்கு சொந்தமானதல்ல என்பது போல தவறான வரைபடம் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து சவூதி அரசிடம் இந்தியா தனது ஆட்சபனையை தெரிவித்துள்ளது.. மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா சொல்லும்போது, இதை திருத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா கூறியுள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிராந்தியங்கள் ஆகும்.

ஜெயிச்சது யாரு ஜெயிச்சது யாரு "டிரம்ப்பா" இல்லாட்டி "பிடனா".. உடனே தெரியாது.. காத்திருக்கணும்!

ஆனால் சவூதி வங்கி நோட்டில் தவறான வரைபடம் இடம் பெற்றுள்ளது.. அதை சரி செய்யுமாறு கோரியுள்ளோம் என்றார்.. ஜி20 குரூப்பின் தலைமைப் பொறுப்புக்கு சவூதி வந்ததையடுத்து இந்த புதிய ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது.

இந்த வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் யாருக்கும் சொந்தமானதல்ல என்பது போல சித்தரித்துள்ளனர்.. இதனால் பாகிஸ்தான் தரப்பும் அதிருப்தியாகியுள்ளதாம்.

English summary
India ask Saudi to correct the borders of the nation in its new banknote
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X