டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிக் டாக் ஆப்புக்கு நிரந்தர தடை? பிளே ஸ்டோரிலிருந்து நீக்குமாறு கூகுள், ஆப்பிளுக்கு இந்தியா கடிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: டிக் டாக் ஆப்பை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள், மற்றும் ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இதனால் டிக் டாக் ஆப்புக்கு இந்தியாவில் நிரந்தரமாக தடை ஏற்படும் சூழல் ஏற்பட்டுளளது.

இளைஞர்களையும், பெண்களையும் அடிமையாக்கி வந்த டிக் டாக் ஆப்பை இனி யாரும் டவுன்லோடு செய்ய முடியாத நிலை உருவாகும் என தெரிகிறது.

மீண்டும் தகிக்கும் நீட்.. மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா? மீண்டும் தகிக்கும் நீட்.. மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா?

புதிதாக 9கோடி பேர்

புதிதாக 9கோடி பேர்

பின்னணி பாடலுக்கு வாயசைத்து, நடனம்ஆடி, டப்ஷ்மாஷ் செய்து பொழுதுபோக்கு வீடியோ வெளியிடும் ஒரு ஆப்தான் டிக் டாக். வாட்ஸ் அப்புக்கு பிறகு அதிக அளவு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவது இந்த ஆப்தான். இந்தியாவில் மார்ச் மாதத்துடன் முடிந்த காலண்டில் புதிததாக 8 கோடியே 86 லட்சம் பேர் டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 18 கோடியே 8 லட்சம் பேர் டிக் டாக் ஆப்பை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

தடை செய்ய கோரிக்கை

தடை செய்ய கோரிக்கை

இந்நிலையில் டிக்டாக் ஆப்பால் பெண்கள் மற்றும் இளைஞர்கள் இடையே சமூக சீரழிவு ஏற்படுவதாகவும், டிக் டாக் ஆப்புக்கு அடிமையாகி சிலர் மரணம் அடைந்துள்ளதாகவும் , இளைஞர்களிடம் ஒழுக்கக்கேட்டை உருவாக்கும் இந்த ஆப்புக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஐகோர்ட் அதிரடி

ஐகோர்ட் அதிரடி

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மத்திய அரசை வழக்கின் எதிர் மனுதாராக சேர்த்lதுடன், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் முன்பே டிக் டாக் போன்ற சமூகத்தை சீரழிக்கும் ஆப்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. மேலும் கூகுள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பிளே ஸ்டோர்களில் இருந்து டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தடைக்கு விலக்கு இல்லை

தடைக்கு விலக்கு இல்லை

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிக் டாக் நிறுவனம் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. விசாரணையையும் ஒத்திவைத்தது.

நீக்குமாறு அரசு கடிதம்

நீக்குமாறு அரசு கடிதம்

இதன்காரணமாக இனிமேல் யாரும் டவுன்லோடு செய்யாத வண்ணம், டிக் டாக் ஆப்பை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள், மற்றும் ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. ஆனால் இதற்கு கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை. ஏற்கனவே டவுன்லோடு செய்திருந்தால் என்ன செய்வது என்பது குறித்த தெளிவான உத்தரவு இல்லை.

தவறான செயல்

தவறான செயல்

இந்நிலையில் டிக் டாக் நிறுவன உரிமையாளர் பைட்டான்ஸ், கடந்த வாரம் பேசுகையில், இதுவரை வன்முறையை தூண்டும் வகையிலான 60 லட்சம் இந்திய வீடியோக்களை நாங்கள் நீக்கி உள்ளோம். நாங்கள் மூன்றாவது தரப்புக்கு எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அளிப்பதில்லை என்றார். மேலும் இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டு இருப்பது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் எனறும் வேதனை தெரிவித்தார்.

English summary
indian Ministry of Electronics and Information Technology asks Google and Apple to remove TikTok from app stores
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X