டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒழுங்கா அவுங்க சொல்றத கேளுங்க.. செப்டம்பர்தான் உங்களுக்கு டைம்.. பாகிஸ்தானை நெருக்கும் இந்தியா

Google Oneindia Tamil News

டெல்லி: இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) செயல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த பாகிஸ்தான் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று இந்தியா அழுத்தம் திருத்தமாக இன்று தெரிவித்துள்ளது.

பாரிஸை தலைமையிடமாகக் கொண்டது எஃப்ஏடிஎஃப் (FATF) அமைப்பு. உலகளாவிய இந்த அமைப்பு, பயங்கரவாதத்திற்கான நிதியுதவி மற்றும் பணமோசடிகளைத் தடுப்பதற்காக செயல்பட்டு வருகிறது.

India asks Pakistan to take credible action to curb terrorism

இந்த நிலையில், பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியை தடுக்க முடியாத அளவுக்கு உள்நாட்டு சட்டங்கள் பலவீனமாக இருப்பதாக கருதப்படும் நாடுகளின் பட்டியலில் (கிரே), பாகிஸ்தானை கடந்த ஜூன் மாதம் சேர்ந்தது, எஃப்ஏடிஎஃப் அமைப்பு.

பயங்கரவாத நிதியுதவி தொடர்பான தனது செயல் திட்டத்தை முடிக்க பாகிஸ்தான், தவறிவிட்டதாகவும், அக்டோபர் மாதத்திற்குள் பாகிஸ்தான் தனது வாக்குறுதியை, நிறைவேற்றாவிட்டால், நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும், கிரே பட்டியலில் இருந்து, கறுப்பு பட்டியலுக்கு, பாகிஸ்தான் கொண்டு செல்லப்படும் என்றும், எஃப்ஏடிஎஃப் நேற்று எச்சரிக்கைவிடுத்திருந்தது.

இதனிடையே, பாகிஸ்தானை தொடர்ந்து கிரே பட்டியலில் வைத்திருப்பதற்கான, எஃப்ஏடிஎஃப் முடிவு தொடர்பான ஊடக கேள்விக்கு, இன்று, பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், பாகிஸ்தானின் செயல் திட்டம் அதன் அரசியல் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

சல்லி, சல்லியா நொறுக்கிய துரைமுருகன்.. திமுக பழைய ஃபார்முக்கு வரும்போதா இப்படியாகனும்! சல்லி, சல்லியா நொறுக்கிய துரைமுருகன்.. திமுக பழைய ஃபார்முக்கு வரும்போதா இப்படியாகனும்!

தங்கள் பகுதியின் கீழ் உள்ள எந்தவொரு பிரதேசத்திலிருந்தும், உருவாகும் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நிதியுதவி தொடர்பான உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்ய நம்பகமான, நிலையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும். எஃப்ஏடிஎஃப் கூறியதை போல, செப்டம்பர் மாதத்திற்குள், இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும், என்று அவர் தெரிவித்தார்.

English summary
India expects Pakistan to take all necessary steps to effectively implement the action plan of the Financial Action Task Force (FATF) fully by September this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X