டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரவாத முகாமில் கடும் தாக்குதல்.. 200-300 பேர் பலியாகி இருக்கலாம்.. இந்திய ராணுவம் பகீர் தகவல்!

இந்திய ராணுவம் பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலில் மொத்தம் 200 முதல் 300 பேர் வரை கொல்லப்பட்டதாக இந்தியா ராணுவம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Indian Air Force: தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல்- வீடியோ

    டெல்லி: இந்திய ராணுவம் பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலில் மொத்தம் 200 முதல் 300 பேர் வரை கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

    பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது உறுதியாகி உள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமான இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

    அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய ராணுவம் அதிரடியாக இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால் பாகிஸ்தான் தரப்பில் பெரிய சேதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

    எந்த விமானம்

    எந்த விமானம்

    மிராஜ் 2000 விமானம் மூலம் இந்த தாக்குதல் நடந்துள்ளது. மொத்தம் 12 விமானங்கள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சர்ஜிக்கல் தாக்குதல் முறையில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    தாக்குதலில் மொத்தம் 200 முதல் 300 பேர் வரை கொல்லப்பட்டதாக இந்தியா ராணுவம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இறந்தவர்கள் எல்லோரும் பாகிஸ்தான் தரப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லோரும் தீவிரவாதிகள் என்றும் கூறப்படுகிறது.

    ஜெய்ஷ் இ முகமது

    ஜெய்ஷ் இ முகமது

    எல்லோரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்பட்ட முசாபராபாத் ஜெய்ஷ் இ முகமது மிகவும் வலுவாக இருக்கும் இடம் ஆகும். மொத்தம் 4 ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது.

    பாக் மறுப்பு

    பாக் மறுப்பு

    ஆனால் இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ஒப்புகொண்டு இருக்கிறது. ஆனால் இதனால் யாரும் பலியாகவில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் கூறி இருக்கிறது.

    English summary
    India attack Pakistan: IAF claims 200 to 300 terrorists causalities in Pakistan side.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X