டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2வது நாளாக தொடரும் முழு அடைப்பு போராட்டம்.. பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

மத்திய பாஜக அரசை கண்டித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    2-வது நாளாக தொடரும் முழு அடைப்பு போராட்டம்- வீடியோ

    டெல்லி: மத்திய பாஜக அரசை கண்டித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

    நேற்று அதிகாலை தொடங்கிய இந்த போராட்டம் இன்று மாலை வரை நடக்க உள்ளது. இதனால் பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

    தமிழகத்தில் இந்த போராட்டம் காரணமாக பெரிய பாதிப்பு இல்லை. தமிழக எல்லை பகுதியில் மட்டும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

     இரண்டு நாள் போராட்டம்

    இரண்டு நாள் போராட்டம்

    பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்தும், மிக மோசமான திட்டங்களை எதிர்த்தும் இந்த போராட்டம் நடக்கிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தொழிற்சாலைகள் பாதித்தது. பணியாளர்களுக்கு போதிய சம்பளம் வழங்கும் கொள்கைகளை மத்திய அரசு வகுக்காதது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதது, தொழில் தொடங்க ஏற்ற சட்டங்களை கொண்டு வராதது என்று பல காரணங்களால் இந்த போராட்டம் நடக்கிறது.

     நேற்று தொடங்கியது

    நேற்று தொடங்கியது

    நேற்று அதிகாலை தொடங்கிய இந்த போராட்டம் இன்று மாலை வரை நடக்க உள்ளது. போராட்டம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க இருக்கும் விவசாயிகள் சங்கமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. 10க்கும் மேற்பட்ட அமைப்பு சார்பாக இந்த போராட்டம் நடக்கிறது.

     யார் காரணம்

    யார் காரணம்

    அகில இந்திய தொழிலாளர் சங்கம் மூலம் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்றே இந்த போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பல மாநிலங்களில் கடைகள் மூடப்பட்டது. பேருந்துகள், ஆட்டோக்கள் நேற்று இயங்கவில்லை.

     இன்றும் நடக்கிறது

    இன்றும் நடக்கிறது

    இந்த போராட்டம் இன்று முழு வடிவம் பெற்று முடிவடையும் என்கிறார்கள். மொத்தம் 20 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக இன்று நடக்கும் போராட்டத்தை நடத்துவார்கள். ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    English summary
    All India Bandh continues for the second day today as more than 2 crore workers around the Nation called for a protest against Central.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X