டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எகிறும் ஆக்டிவ் கொரோனா கேஸ்கள்.. உலகிலேயே 4வது இடம்.. லிஸ்டில் கிடுகிடுவென ஏறிப்போகும் இந்தியா

Google Oneindia Tamil News

டெல்லி: 98,298 கொரோனா கேஸ்களுடன், இந்தியா இப்போது உலகில் நான்காவது மிக அதிக எண்ணிக்கையிலான ஆக்டிவ் கொரோனா கேஸ்களை கொண்ட நாடாக மாறியுள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் கேஸ் உள்ள அமெரிக்காதான் உள்ளது.

பிரேசிலில் 529,405 மொத்த கேஸ்கள் உள்ளன இதில் 288,279 ஆக்டிவ் கேஸ்களாகும். எனவே அந்த நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. 231,719 ஆக்டிவ் கேஸ்களுடன் ரஷ்யா 3வது இடத்தில் உள்ளது.

27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு.. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் மோசம்.. முழு லிஸ்ட்27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு.. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் மோசம்.. முழு லிஸ்ட்

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

இந்த பட்டியலில்தான், இந்தியா 4வது இடத்தில் உள்ளது. 96,898 ஆக்டிவ் கேஸ்களுடன் பெரு நாடு, 5வது இடத்தில் உள்ளது. இந்தியா இதுவரை பதிவு செய்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 199,785 ஆகும். அதேநேரம், மீட்பு விகிதத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் உள்ளது. ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது.

கொரோனா இறப்பு

கொரோனா இறப்பு

இருப்பினும், இந்தியா தொடர்ந்து மூன்று நாட்களாக, ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 200 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின், இறப்புகளை பதிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அபாரம்

பஞ்சாப் அபாரம்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில், பஞ்சாப் மாநிலம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மே மாத தொடக்கத்தில் இருந்தே V-வடிவ மீட்டெடுப்பு அங்கு நிகழ்ந்துள்ளது. ஏப்ரல் இறுதி வரை, தினசரி 50 க்கும் குறைவான புதிய கேஸ்கள் பஞ்சாப்பில் பதிவானது. ஆனால் பின்னர் மே 2 அன்று ஒரே நாளில் 415 கேஸ்கள் பதிவாகின.

சிறப்பான நடவடிக்கை

சிறப்பான நடவடிக்கை

அப்போதிருந்து, தினசரி புதிய கேஸ்கள் மீண்டும் 50 என்ற அளவுக்கு குறைந்துவிட்டன. பஞ்சாபில் உறுதிப்படுத்தப்பட்ட 2,263 கேஸ்களில், 10 சதவீதம் மட்டுமே இப்போது ஆக்டிவாக உள்ளன. அந்த மாநிலத்தில் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

English summary
With more than 98,298 cases, India now has the fourth-highest number of active cases in the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X