டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோனா பாதிப்பு- 273 பேர் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 9851 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அத்துடன் ஒரே நாளில் 273 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

Recommended Video

    டெல்லியில் பெரிய நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளது.. வல்லுநர்கள் எச்சரிக்கை

    இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாகி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் 24 மணிநேரத்தில் 9851 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    India: Biggest spike of 9,851 Coronavirus Positives

    24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 273 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,26,770 ஆக உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 6348 ஆகவும் அதிகரித்திருக்கிறது. மாநிலங்களிலேயே மகாராஷ்டிராவில்தான் மிக அதிகபட்சமாக 77,793 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இம்மாநிலத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2710 ஆகவும் உள்ளது. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது.

    'ஏ' பாசிட்டிவ் இரத்தம் உள்ளவர்களை கொரோனா மோசமாக பாதிக்கிறது? யாரை அதிகம் பாதிக்காது? 'ஏ' பாசிட்டிவ் இரத்தம் உள்ளவர்களை கொரோனா மோசமாக பாதிக்கிறது? யாரை அதிகம் பாதிக்காது?

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 27,256. கொரோனாவால் மரணித்தோர் எண்ணிக்கை 220 ஆகவும் அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் சென்னையில்தான் மிக அதிகபட்சமாக 18,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து 3-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 18,609 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,155.

    ராஜஸ்தானில் 9,862, உத்தரப்பிரதேசத்தில் 9,237, மத்திய பிரதேசத்தில் 8,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,46 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    India has recorded the biggest-ever spike of 9,851 Covid cases and 273 deaths.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X