• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இந்தியாவில் 20 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.. மருத்துவ நிபுணர்கள் கொடுத்த முக்கிய வார்னிங்!

|

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த ஜனவரி 30ம் தேதி முதல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு மின்னல் வேகத்தில் பரவியது, தற்போது ஆறு மாதத்தில் 20 லட்சம் பேருக்கு பரவி உள்ளது.

உலகிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு 20 லட்சத்தை கடந்த இரண்டு நாடுகளாக இதுவரை அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகியவை தான் இருந்தன.

அந்த வரிசையில் இந்தியா மூன்றாவது நாடாக இணைந்துள்ளது. இந்தியாவில் வியாழக்கிழமை இரவு நிலவரப்படி 20,25,409 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 13,77,384 பேர் குணம் அடைந்துவிட்டனர். 6,05,933 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 41,638 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் சீனிவாச ஆச்சார்யலு கொரோனாவுக்கு பலி

ஒரு சதவீத பாதிப்பு

ஒரு சதவீத பாதிப்பு

உலகிலேயே 2வது அதிக மக்கள் தொகை உள்ள நாடான இந்தியாவில் இந்த பாதிப்பை ஒப்பிடும் மிக குறைவான சதவீதம் தான் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். "இது 130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை" என்று சஃப்தர்ஜங் மருத்துவமனையின் சமூக மரு த்துவத் துறையின் பேராசிரியரும் தலைவருமான டாக்டர் ஜுகல் கிஷோர் கூறினார்.

திறமையான நிர்வாகம்

திறமையான நிர்வாகம்

"நாம் அதிக சோதனை செய்தால் அதிக பாதிப்பு எண்ணிக்கை சேர்க்கப்படுகிறது. இறப்பு தவிர்க்கப்பட வேண்டியது தான் முக்கியமானது. அதற்கு தொற்று பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய வேண்டும். திறமையான நிர்வாகத்தால் அந்த வேலையைச் செய்ய முடியும், "என்றும் ஜுகல் கிஷோர் கூறினார்.

ஜூலை 16ல் 10லட்சம்

ஜூலை 16ல் 10லட்சம்

இந்தியா தனது முதல் கொரோனா பாதிப்பை (கோவிட் 19) ஜனவரி 30 அன்று பதிவு செய்தது. அன்றில் இருந்து நோய் தொற்று வளரத் தொடங்கியது. ஜூலை 16 அன்று நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியது, இது அடுத்த மூன்று வாரங்களில் (ஆகஸ்ட் 6ல்) 20 லட்சமாக அதிகரித்துள்ளது.

நிலைமை மோசமானது

நிலைமை மோசமானது

ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஃபார் தற்கால ஆய்வுகளுக்கான (ஆர்ஜிஐசிஎஸ்) மூத்த ஆராய்ச்சி சக அமீர் உல்லா கான் இதுபற்றி கூறுகையில், "கிராமப்புறங்களில் வைரஸ் பரவுவது அச்சுறுத்தலாக உள்ளது. ஜூன் வரை, வைரஸ் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது . நவீன சுகாதார வசதிகள் இல்லாத, சிறிய நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் தொற்றுநோய் பரவி வருவது என்பது மிகவும் மோசமானது, ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் எண்ணிக்கையை மிஞ்சினால் ஆச்சரியமில்லை. இப்போது அரசு மிக விரைவாக செயல்பட வேண்டும். சோதனைக்கு தாராளமாக பணத்தை செலவழிக்க வேண்டும் லாக்டவுனை தொடர வேண்டும் "என்று அவர் கூறினார்.

முககவசம் ஒன்றே தீர்வு

முககவசம் ஒன்றே தீர்வு

இந்தியாவின் மக்கள்தொகை காரணமாக அதிக எண்ணிக்கையிலான பாசிட்டிவ் கேஸ்கள் இருக்கும் என்றும், தடுப்பூசி கிடைக்கும் வரை தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமே இப்போது தொடரும் என்றும் பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) விஞ்ஞானியும் முன்னாள் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்களின் தலைவருமான லலித் கான்ட் இதுபற்றி கூறுகையில், "நாம் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி பெறும் வரை வைரஸ் பரவுவது தொடரும். தற்போது கிடைக்கும் ஒரே தடுப்பு நடவடிக்கை முககவசத்தை பயன்படுத்துதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுதல், இருமல் தும்மலின் எச்சரிக்கையாக இருத்தால் இவை அனைத்தும் சமூகத்தின் மாறிவரும் நடத்தைகளாகி உள்ளது.

இறப்பை குறைக்க வேண்டும்

இறப்பை குறைக்க வேண்டும்

தீவிரமான சோதனை, தனிமைப்படுத்தல், தடமறிதல் மற்றும் தொற்றை கண்டுபிடித்தல் ஆகியவைதான் தொற்று பாதிப்பை கையாள நம்மிடம் உள்ள வழி... நாம் அதை தொடர வேண்டும். அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் பதிவாகும் மாநிலங்களில், சோதனைகள் அதிகரிப்பது மிக அவசியம். இறப்பு விகிதத்தை குறைவாக வைத்திருக்க வேண்டும், இதுவே நம்பிக்கையை அளிக்கும், "இவ்வாறு லலித் கான்ட் கூறினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
India crosses 2 million covid-19 cases on Thursday. India currently stands at second position in the world in term of covid-19 cases and only behind Brazil and the US.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X