டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்

ஈரான் - அமெரிக்கா இடையில் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக நிலவி வரும் பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஈரான் - அமெரிக்கா இடையில் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக நிலவி வரும் பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையில் நிகழ்ந்து வரும் பிரச்சனை உலக நாடுகளுக்கு இடையிலான சண்டையாக உருவெடுத்துள்ளது. விரைவில் இது உலகப் போராட் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் டிரோன் தாக்குதல் நிகழ்த்திய அமெரிக்கா ஈரான் குவாட்ஸ் படை தளபதி சுலைமானியை கொலை செய்தது. இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் 12 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில்தான் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவீத் ஷரீப் இந்தியா வருகை புரிந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை ஜாவீத் ஷரீப் சந்தித்தார். ஈரான் அமெரிக்கா இடையே சண்டை குறித்து இவர்கள் பேசினார்கள்.

அமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி!அமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி!

கருத்து

கருத்து

இந்த நிலையில் அமெரிக்கா ஈரான் இடையிலான உறவு குறித்து ஜாவீத் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஈரானில் இருந்து கடல் வழி போக்குவரத்து மேற்கொள்வதில் இந்தியா சில சிரமங்களை சந்தித்து வருகிறது. சாபாஹர் துறைமுகத்தில் இருந்து இந்தியா பொருட்களை பெறுவதில் சில சிரமங்கள் நிலவி வருகிறது.

காரணம்

காரணம்

அமெரிக்காவில் பொருளாதார தடை காரணமாக இந்த பிரச்சனை நிலவி வருகிறது. விரைவில் இது சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். ஈரானின் வளர்ச்சியில் இந்தியா அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.

என்ன நண்பன்

என்ன நண்பன்

இந்தியா அமெரிக்காவிற்கு நல்ல நண்பனாக இருக்கிறது. அதேபோல் ஈரானுடனும் இந்தியா நல்ல உறவை கடைப்பிடித்து வருகிறது. ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்து இந்தியா பேச வேண்டும்.

இந்தியா உதவும்

இந்தியா உதவும்

அணு ஆயுத ஒப்பந்தம் குறித்தும், மீண்டும் அமெரிக்காவின் அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரானை இணைப்பது குறித்தும் இந்தியா பேச வேண்டும். அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவின் செயல் இதில் அதிக கவனம் பெறும் என்று ஜாவீத் கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
India can pole a major role solving The US and Iran nuclear agreement issues says Iran Foreign Minister Javad Zarif .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X