டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

73வது சுதந்திர தினம்.. செங்கோட்டையில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.. முப்படை வீரர்கள் மரியாதை!

இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி இன்று டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார்.

இந்திய பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரம் அடைந்தது. பலரின் தியாகங்கள், கடும் போராட்டம் மற்றும் அமைதியான அகிம்சை போராட்டத்தால் ஆகஸ்ட் 14 நள்ளிரவில் நாம் சுதந்திரத்தை அடைந்தோம்.

India celebrates its Independence day: PM Modi will raise the flag in Delhi

இதையடுத்து இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நினைவிடத்தில் மரியாதை செய்த மோடி செங்கோட்டைக்கு வந்தார்.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார். பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்கள் மரியாதை அளித்தனர். இதையடுத்து செங்கோட்டையில் முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இன்று அணிவகுப்பு நடக்க உள்ளது.

சுதந்திர தினத்தை இன்று நாடு முழுவதும் தலைவர்கள், மக்கள் கொண்டாடி வருகிறார்கள். மாநில முதல்வர்கள் எல்லோரும் அவர்கள் மாநில தலைமையகத்தில் கொடி ஏற்றுகிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஜார்ஜ் கோட்டையில் கோடி ஏற்றுகிறார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.காஷ்மீர் எல்லையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

டில்லியில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார், துணை ராணுவ படையினர்,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

English summary
India celebrates its Independence day: PM Modi will raise the flag in Delhi red fort.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X