டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டின் 71வது குடியரசு தினவிழா கோலாகலம்.. தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி.. கண்கவர் அணிவகுப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    மெய்சிலிர்க்க வைத்த முப்படை அணிவகுப்பு

    டெல்லி: நாட்டின் 71வது குடியரசு தின விழா ,இன்று கோலாகலமாக கொண்டாட. இதையொட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

    நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 1950 ஜனவரி 26ம் தேதி நாட்டின் குடியரசுத் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, டெல்லியில் நடந்த விழாவில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு, இந்தியா கேட் பகுதியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து தேசிய கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடிஏற்றி வைத்தார். இந்த விழாவில் தலைமை விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ பங்கேற்றார்.

    குடியரசுத் தலைவர்

    குடியரசுத் தலைவர்

    ராஜபாதை முதல் செங்கோட்டை வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நாட்டின் வலிமையை பறைசாற்றும் விதமாக முப்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டு பார்வையிட்டார்

    அலங்கார ஊர்திகள்

    அலங்கார ஊர்திகள்

    அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட எம்-77 ஏ2 அல்ட்ரா லைட் ஹோவிட்ஸர் என்ற நவீன ஆயுதம், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இன்ஜின் இல்லாத ரயிலான டிரெயின் 18 மற்றும் புல்லட் ரயில்களின் மாதிரிகள், உயிரி எரிபொருள் பயன்படுத்தப்படும் ஏ.என். 32 விமானம், மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் கண்கவர் அலங்கார ஊர்திகள் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றன..

    பல்லாயிரம் மக்கள்

    பல்லாயிரம் மக்கள்

    இதேபோல் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார ஊர்திகள் இடம் பெற்றன. பல்லாயிரம் மக்கள் விழாவில் பங்கேற்றனர் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், மெய்சிலிர்க்கவைக்கும் முப்படை வீரர்களின் அணி வகுப்பும் நடந்தது.. விழாவை ஒட்டி டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

    சக்தி ஏவுகணை

    சக்தி ஏவுகணை

    விழாவில் எல்லை பாதுகாப்பு படையின் ஒட்டகப்படையின் அணிவகுப்பு நடந்தது. சாரண படைப்பிரிவின் சிறந்த மாணவர்கள் அணிவகுப்பு நடந்தது
    அணிவகுப்பில் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சக்தி இடம் பெற்றது. ஆகாஷ் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம் பெற்றது.

    கம்பீரமாக வந்தார்

    தமிழக காவல் தெய்வம் அய்யனார் சிலை கிராமிய கலை நடனத்துடன் கம்பீரமாக வந்தது. ராஜஸ்தான், தெலுங்கானா மாநில வாகனங்கள் அணிவகுப்பில் தங்கள் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் வந்தது அஸ்ஸாம், இமாச்சல் பிரதேசம், ஆந்திரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், உள்பட பல 22 மாநிலங்களின் வாகனங்கள் அணிவகுப்பில் வந்தன. மாநிலங்களின் கலாச்சாரததை பறைசாற்றும் வகையில் இந்த ஊர்திகள் அணிவகுப்பு நடந்தது.

    English summary
    India celebrating its 71st Republic Day today marking it with grand celebrations in delhi. Brazilian Prez Jair Bolsonaro To Be Chief Guest
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X