டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் விரைவாக தொடர்பு கொள்ள ஹாட்லைன்.. வடக்கு சிக்கிம் செக்டாரில் அமைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: வடக்கு சிக்கிம் செக்டாரில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே ஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது.

India, China Armies Set Up Hotline For Sikkim Sector to Communicate

வடக்கு சிக்கிம் பகுதியிலுள்ள, கொங்க்ரா லா மற்றும், திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்தின், கம்பா சோங்கிலுள்ள சீன மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) ஆகியவற்றுக்கு இடையே இந்த ஹாட்லைன் அமைக்கப்பட்டு உள்ளது.

Recommended Video

    India- China ராணுவ தளபதிகள் விரைவாக தொடர்பு கொள்ள அமைக்கப்பட்ட Hotline

    ஹாட்லைன் இரு நாட்டு எல்லைகளில் நம்பிக்கை மற்றும் நல்லுறவு உணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஹாட்லைன் ஆகஸ்ட் 1ம் தேதி திறக்கப்பட்டது. அன்று பிஎல்ஏ தினம் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

    "இரு நாடுகளின் ஆயுதப்படைகள் தரை தளபதிகள் மட்டத்தில் தகவல்தொடர்புக்காக இது பயன்படும்" என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஹாட்லைன் தொடக்க விழாவில் இரு தரப்பு தளபதிகளும் கலந்து கொண்டனர், நட்பு மற்றும் நல்லிணக்கத்தின் செய்தி பரிமாறப்பட்டது என்று ராணுவம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

    லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முற்பட்ட போது அதை தடுத்த இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது. கல்வான் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கடந்த வருடம் கொல்லப்பட்டனர்.

    நடு ரோட்டில் போலீஸ்காரர் முன் கார் டிரைவரை எகிறி எகிறி அடித்த பெண்.. வைரலாகும் வீடியோ.. கதறிய இளைஞர் நடு ரோட்டில் போலீஸ்காரர் முன் கார் டிரைவரை எகிறி எகிறி அடித்த பெண்.. வைரலாகும் வீடியோ.. கதறிய இளைஞர்

    இதன் பிறகு இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்தது. சீனநாட்டின் பல்வேறு பொருட்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இப்படியான சூழ்நிலை தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், ராணுவத்தினர் மத்தியில் அவசர தேவைகளுக்கு ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது வடகிழக்குப் பகுதியில் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

    English summary
    A hotline has been set up between Indian and Chinese forces in the North Sikkim sector. The hotline is located between North Sikkim and the Chinese People's Liberation Army (PLA) in Tibetan Autonomous Region. "It will be used for communication at the level of ground commanders of the two countries' armed forces," the arm said. The commanders of both sides attended the opening ceremony of the hotline and the message of friendship and reconciliation was exchanged, the military said in its press release.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X