• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
LIVE

டெல்லி ஐ.டி.ரெய்டுகளில் பிடிபட்ட சீனர் 2018-ல் உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டவர்-பகீர் தகவல்

|

டெல்லி; டெலியில் வருமான வரித்துறையினர் நேற்று நடத்திய சோதனைகளில் சிக்கிய சீனாவை சேர்ந்த லூ சங் என்பவர், 2018-ல் சீனாவுக்காக வேவு பார்த்ததாக கைது செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

தைவானுக்கு ஆதரவு.. பீஜிங்குக்கு இந்தியா நெத்தியடி.. சிங்கிளாக வந்து சிக்கிக் கொண்ட சீனா...!!

Newest First Oldest First
6:31 PM, 12 Aug
லடாக் எல்லையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை, அங்கு சீன ராணுவத்தினர், பாங்காங் த்சோவுக்கு அருகில் உள்ள பகுதிகளை ஆக்கிரமித்து வருகின்றனர். மேலும், டெப்சாங் சமவெளிகளில் இந்திய ரோந்துப் பணிகளைத் தடுக்கின்றனர்.
11:24 PM, 11 Aug
டெல்லியில் சீனா நிறுவனங்களின் ரூ1,000 கோடி ஹவாலா மோசடி - ஐடி அதிகாரிகள் ரெய்டு. ஹவாலா, அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக 21 சீன, இந்திய நிறுவனங்களில் ஐடி அதிரடி ரெய்டு. சீனர்களின் 40 போலி வங்கி கணக்குகள் சிக்கியது -சீனர் ஒருவர் கைது எனவும் தகவல்
4:18 PM, 10 Aug
சீன பொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்தால் சீனாவிற்கு பெரிய பொருளாதார சரிவு. சீனாவின் இந்திய ஏற்றுமதி 27% சரிந்தது. இரண்டு நாடுகள் இடையே மொத்த வணிகம் 18% சரிந்தது.
10:21 AM, 9 Aug
பீரங்கி துப்பாக்கிகள், துப்பாக்கிகள், ரேடார் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை. நடப்பாண்டு முதல் 2024-ம் ஆண்டுக்குள் ராணுவ தளவாடங்கள் இறக்குமதியை முழுமையாக செயல்படுத்த முடிவு.
10:07 AM, 9 Aug
101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை- மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்
9:23 AM, 9 Aug
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார்
9:45 AM, 7 Aug
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் விஷயத்தை எழுப்ப முயன்ற சீனாவுக்கு தோல்வி. அமெரிக்கா உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகள் ஆதரவு கிடைக்காததால் சீன முயற்சிக்கு தோல்வி.
5:54 PM, 6 Aug
இந்திய ராணுவம் 6 தனி சாட்டிலைட்களை மத்திய அரசிடம் கேட்டு உள்ளது. ராணுவ பயன்பாட்டிற்கு 4-6 சாட்டிலைட்கள் வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டு உள்ளது. சீனாவின் படைகளை கண்காணிக்கும் வகையில் சாட்டிலைட்களை கேட்டுள்ளது.
4:32 PM, 6 Aug
சீனாவை சேர்ந்த விவோ மொபைல் நிறுவனம் ஐபிஎல்-இல் இருந்து விலகல். ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியது விவோ. இந்தியா - சீனா எல்லைப் பதற்றம் காரணமாக விவோ விலகியது.
2:19 PM, 4 Aug
ஆயுதங்கள் சப்ளை- ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்- வடகிழக்கில் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்கிறது சீனா என புகார்
11:16 AM, 3 Aug
திபெத் வழியாக சீனா போர் தொடுத்தால் ரபேலை வைத்து பதிலடி - முன்னாள் ராணுவத் தளபதி. திபெத் பிராந்திய வான்வெளியில் ரபேலின் கையே ஓங்கியிருக்கும் - மாஜி தளபதி தானோ. ரபேல் போர்விமானங்கள் இந்தியாவுக்கு பெரும் வெற்றியைக் கொடுக்கும் - தானோ சொல்கிறார்.
9:51 AM, 2 Aug
இந்தியா - சீனா இடையே இன்று ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை. எல்லையில் சீனா முழுமையாக படைகளை வாபஸ் வாங்காத நிலையில் பேச்சுவார்த்தை.
7:52 AM, 2 Aug
கனடாவின் டொரண்டோவில் சீனாவுக்கு எதிராக பல்வேறு நாட்டினர் போராட்டம். சீனாவுக்கு எதிராக இந்தியர்கள், திபெத்தியர்கள் உள்ளிட்டோர் போராட்டம்.
11:05 PM, 31 Jul
லடாக்கில் இருக்கும் பாங்காங் திசோ பகுதியில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அங்கு சீனா நவீன படகுகளை குவித்து உள்ளது. அதேபோல் பாங்காங் திசோ பகுதியில் சீனா டென்ட்களை அமைத்து வருகிறது. இதற்கான சாட்டிலைட் புகைப்பட ஆதரங்கள் வெளியாகி உள்ளது
1:36 PM, 31 Jul
மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீதான பயங்கரவாதிகள் தாக்குதலில் சீனாவுக்கு தொடர்பு?
10:22 AM, 31 Jul
சீனா தனது இறையாண்மையை உறுதியாக நிலைநிறுத்துகிறது, ஒருபோதும் எல்லையில் ஆக்கிரமிப்பு செய்யாது- சன் வீடோங். மற்ற நாடுகளின் இழப்பில் எங்களை வளர்த்துக் கொண்டது இல்லை - சன் வீடோங்.
4:00 PM, 29 Jul
ரஃபேல் போர் விமானங்களுக்கு அம்பாலா விமான படை தளத்தில் வாட்டர் சல்யூட்
3:44 PM, 29 Jul
அம்பாலா விமான படை தளத்தில் தரை இறங்கிய ரஃபேல் போர் விமானங்கள்
3:30 PM, 29 Jul
ரஃபேல் போர் விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சி- வாட்டர் சல்யூட் அடித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது
3:29 PM, 29 Jul
ரஃபேல் விமானங்களை விமான படைத் தளபதி பதோரியா வரவேற்றார்
3:29 PM, 29 Jul
அம்பாலாவில் ரஃபேல் போர் விமானங்கள்
3:27 PM, 29 Jul
ரஃபேல் போர் விமானங்கள் பாதுகாப்பாக தரை இறங்கிவிட்டன- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
3:14 PM, 29 Jul
அம்பாலா விமானப் படை தளத்தில் தரை இறங்கின ரஃபேல் போர்விமானங்கள்
2:51 PM, 29 Jul
ரஃபேல் போர் விமானங்களை சுகோய் போர் விமானங்கள் அழைத்து வருகின்றன
2:49 PM, 29 Jul
ஹரியானாவின் அம்பாலா விமான படைதளத்தில் தரை இறங்குகின்றன ரஃபேல் போர் விமானங்கள்
2:00 PM, 29 Jul
பிரான்சில் இருந்து 7,000 கி.மீ தூரம் பயணித்து இந்தியாவுக்குள் நுழைந்தன ரஃபேல் போர் விமானங்கள். ரஃபேல் போர்விமானங்களுக்கு ரேடியோ சிக்னல் மூலம் வரவேற்பளிக்கப்பட்டது. பிரான்சில் இருந்து 5 ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலா விமான படை தளத்தில் தரை இறங்குகின்றன.
2:00 PM, 29 Jul
ரஃபேல் போர் விமானங்கள் இந்திய வான்பரப்புக்குள் நுழைந்தன
12:37 PM, 27 Jul
லடாக்கை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் வாலாட்ட நினைக்கும் சீனா- எல்லையில் புதிய சாலை
10:14 AM, 26 Jul
இந்தியா - சீனா இடையே லடாக் தொடர்பாக இந்தவாரம் பேச்சுவார்த்தை. 2 நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
11:59 PM, 25 Jul
இந்தியா-சீனா இடையேயான உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு (LAC) பகுதியில் சீன ராணுவம் பின்வாங்கவில்லை. இப்படியே நிலைமை நீடித்தால் எல்லை மாற்றியமைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும் - பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கை
READ MORE

India-China border face off news LIVE UPDATES: Casualties on both sides, says Army

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
India-China Border fight Latest News Live Updates in Tamil is here, stay tune with us for current news.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more