டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லையில் சீனா தொல்லை.. மீண்டும் இந்தியா-சீன ராணுவ மட்ட பேச்சுவார்த்தை

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் பதற்றத்தை தணிக்க ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளுக்கும் இடையே முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்தப் பேச்சுவார்த்தை துவங்க இருக்கிறது.

டெல்லியில் நேற்று நடந்த இதுதொடர்பான கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்றது.

ஆய்வகத்திலிருந்து லீக்.. சீனாவில் தீயாக பரவும் புதுவகை பாக்டீரியா.. தொற்று வந்தால் ஆண்மை அவுட்! ஆய்வகத்திலிருந்து லீக்.. சீனாவில் தீயாக பரவும் புதுவகை பாக்டீரியா.. தொற்று வந்தால் ஆண்மை அவுட்!

முத்தரப்பு

முத்தரப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஸ்கோவில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எல்லையில் பதற்றத்தை தணிப்பது, ராணுவ மற்றும் ராஜாங்க ரீதியில் பேச்சுவாத்தை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று இந்தக் கூட்டம் நடந்தது.

தேதி முடிவில்லை

தேதி முடிவில்லை

இந்தக் கூட்டம் நடத்துவதற்கு சீனாவும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எப்போது இந்தக் கூட்டம் எங்கு நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் எல்லையில் படைகளை வாபஸ் பெறுவது பற்றி பேசப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது எல்லையில் இருநாட்டுப் படைகளும் எந்த சூழலையும் எதிர்கொள்ளும் நிலையில் தயாராக இருக்கின்றனர்.

சீனா

சீனா

எல்லையில் கடந்த மாதம் நடத்த மோதலில் இந்தியா பிங்கர் 3, 4 ஆகியவற்றை சீனாவிடம் இருந்து மீட்டுள்ளது. குளிர் காலத்தைப் பயன்படுத்தி சீனா எப்போதும் தனது படைகளை எல்லையில் நகர்த்தும் என்பதால், தற்போது இருநாட்டுப் படைகளும் முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

பாங்கோங் திசோ

பாங்கோங் திசோ

தற்போது இந்தியா தன்னை பாங்கோங் திசோ மற்றும் சுசூல் ஆகிய இடங்களில் நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. இங்கு இருந்து 2 கி மீட்டர் தொலைவிலான சீனாவின் மோல்டோ காரிசன் பகுதிகளை இந்தியா கண்காணிக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. முன்பு போல் சீனா அவ்வளவு எளிதில் இந்திய எல்லைக்குள் வர முடியாது என்று கூறப்படுகிறது.

ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாங்கோங் திசோ மற்றும் இதன் தெற்கு பகுதியில் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது எச்சரிக்கையாக இருதரப்பிலும் நடத்தப்பட்டு இருந்ததாக தெரிய வந்தது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லோக் சபாவில் பேசி இருந்த ராஜ்நாத் சிங் சீன ஆக்கிரமிப்பு குறித்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
90-minute meeting of the CSG Military talks date awaited
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X