டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் பிங்கர் ஏரியாவில் முகாம் ... சீனாவை நம்பலாமா?

Google Oneindia Tamil News

டெல்லி: எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியிலும், லடாக்கின் கிழக்கில் பிபி14, பிபி15, பிபி17 (ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ்) ஆகிய இடங்களில் சீனா ராணுவ துருப்புகளை வாபஸ் பெற்றுக் கொண்டது. ஆனால், பிங்கர் ஏரியா பகுதியில் இன்னும் சீன வீரர்கள் இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய, சீன எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்து நேற்று முழுவதுமாக சீன ராணுவத்தினர் வெளியேறினர். இந்தப் பகுதியில் இருந்து 2 கி. மீட்டர் தொலைவிற்கு உள் வாங்கிச் சென்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

India, China complete disengagement in Hot Springs area, but Chinese present in Finger area

அதேசமயம் பிங்கர் ஏரியா பகுதியில் இன்னும் சீன ராணுவ வீரர்கள் சிறிதளவில் முகாமிட்டுள்ளனர். இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு இடமாக கருதப்படும் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரும் தினமும் ரோந்து செல்வது வழக்கம். அவ்வாறு ரோந்து செல்லும் பகுதியான பிபி14, பிபி15, பிபி17 பகுதியில் இருந்து இருநாட்டு ராணுவத்தினரும் சுமார் 2 கி.மீட்டர் தொலைவிற்கு தங்களது பகுதிக்குள் வாபஸ் பெற்றுள்ளனர். சீனா தனது முகாம்கள் அனைத்தையும் இங்கு இருந்து காலி செய்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு பேச்சுவார்த்தையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய, சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருந்தனர். இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் பதட்டம் ஏற்பட்டு, இருதரப்பிலும் படை அதிகரிக்கத் துவங்கினர்.

கிரீன் சிக்னல்.. சென்னை டிராபிக் விதியில் அதிரடி மாற்றம்.. பின்னணி காரணம்.. தமிழகம் முழுக்க வருமா?கிரீன் சிக்னல்.. சென்னை டிராபிக் விதியில் அதிரடி மாற்றம்.. பின்னணி காரணம்.. தமிழகம் முழுக்க வருமா?

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இடையே தொலைபேசியில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எல்லையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. இருநாட்டுப் படைகளும் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்து வாபஸ் பெற்றன.

Recommended Video

    India news channel - க்கு தடை விதித்த nepal

    தன்னுடைய கூடாரங்களை சீனா காலி செய்து கொண்டு சென்று விட்டாலும், கால்வான் ஆற்றுப் பகுதியில் சீனாவின் கனரக வாகனங்கள் இன்னும் முகாமிட்டு உள்ளன. விமானங்கள் மற்றும் ரோந்து மூலமும் சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது.

    English summary
    India, China complete disengagement in Hot Springs area, but Chinese present in Finger area
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X