டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனா விவகாரம்- யு.எஸ். பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: சீனா விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று தொலைபேசியில் ஆலோசனை நடத்த உள்ளார்.

லடாக் கிழக்கு எல்லையில் சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்தியாவின் பதிலடியில் மொத்தம் 43 சீன ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

India-China face-off: Rajnath Singh to hold talks with US Defence Minsiter

இதனையடுத்து சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இன்னொரு புறம் சீனாவுடன் பேச்சுவார்த்தைகளையும் மத்திய அரசு அனைத்து நிலைகளிலும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பருடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று தொலைபேசியில் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லையில் சீனா அத்துமீறி மேற்கொண்டு வரும் ஊடுருவல்கள், கட்டுமானப் பணிகள், இந்தியாவின் எதிர்நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட இருக்கிறது.

 அப்போதும் நேருவுடன்தான் நின்றோம்.. இப்போதும் தேசத்துடன்தான் இருக்கிறோம்.. சந்தேகம் வேண்டாம்.. சிபிஐ அப்போதும் நேருவுடன்தான் நின்றோம்.. இப்போதும் தேசத்துடன்தான் இருக்கிறோம்.. சந்தேகம் வேண்டாம்.. சிபிஐ

ஏற்கனவே லடாக் எல்லையில் இந்தியா- சீனா கமாண்டர்கள் நிலையில் 2 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தன. இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பின்னணியில் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எஸ்பருடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

English summary
Defence Minister Rajnath Singh to talk to his American counterpart Mark Esper over telephone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X