டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவுடன் 12 மணிநேரத்துக்கும் மேலாக இரவிலும் பேச்சுவார்த்தை! மத்திய அரசு அதிகாரியும் பங்கேற்பு

Google Oneindia Tamil News

டெல்லி: எல்லை பதற்றம் தொடர்பாக சீனாவுடன் 12 மணிநேரத்துக்கும் மேலாக இரவிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல் முறையாக இந்திய ராணுவ குழுவுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரியும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.

லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மாஸ்கோவில் இந்தியா- சீனா வெளியுறவு அமைச்சர்கள் 5 அம்ச ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டனர்.

India, China hold over 12 hour long talks to ease Ladakh standoff

இதனைத் தொடர்ந்து சீனா பகுதியான மால்டோவில் திங்கள்கிழமை மீண்டும் இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ராணுவ தளபதிகள் நிலையிலான இந்த பேச்சுவார்த்தை காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணியை தாண்டியும் நீடித்தது.

ராஜதந்திரம்.. சீனா உடன் ராணுவ மட்டத்தில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை.. இந்தியா செம்ம திட்டம்! ராஜதந்திரம்.. சீனா உடன் ராணுவ மட்டத்தில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை.. இந்தியா செம்ம திட்டம்!

சுமார் 12 மணிநேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியா தரப்பில் ராணுவ தளபதி ஹரீந்தர் சிங் தலைமையிலான குழு இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. இந்த குழுவில் முதல் முறையாக வெளியுறவு அமைச்சக அதிகாரி நவீன் ஶ்ரீவத்சாவும் பங்கேற்றார்.

English summary
India, China hold over 12 hour long talks to ease Ladakh standoff on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X