டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லை பிரச்சனை: இந்தியா- சீனா அதிகாரிகள் இன்று மீண்டும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை

Google Oneindia Tamil News

டெல்லி: எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா, சீனா அதிகாரிகள் இன்று வீடியோகான்ஃபரன்ஸ் மூலம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளதாக்கை சீனா ஆக்கிரமிக்க முயன்றது. இந்த ஆக்கிரமிப்பு முயற்சியை நமது ராணுவ வீரர்கள் தீரமுடன் முறியடித்தனர். இதில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

India China Senior diplomats to hold talks again

சீனா தரப்பில் 40 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து எல்லை பதற்றத்தைத் தொடர்ந்து இருநாடுகளின் ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக இன்று இருநாட்டு அதிகாரிகளும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆசிய விவகாரங்களுக்கான செயலாளர் நவீன் ஶ்ரீவத்சவா தலைமையிலான இந்திய குழு இன்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது.

நேரு குடும்பத்தைச் சேராதவருக்கு காங். தலைவர் பதவி... ப.சிதம்பரத்துக்கு கிடைக்குமா வாய்ப்பு? நேரு குடும்பத்தைச் சேராதவருக்கு காங். தலைவர் பதவி... ப.சிதம்பரத்துக்கு கிடைக்குமா வாய்ப்பு?

சீனாவின் வெளிவிவகார அமைச்சக எல்லை பிரச்சனைகள் தொடர்பான செயலாளர் ஹாங் லியாங் தலைமையிலான குழு இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறது.

Recommended Video

    எல்லையில் தயாராகும் சீனாவின் J-20 போர்விமானங்கள் | வெளியான செயற்கைகோள் படங்கள்

    English summary
    India and China's Senior diplomats will hold talks again on borders dispute.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X