டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவிடம் பாக். வாங்கும் உளவு டிரோன்.. பிளான் பிரிடேட்டர்- B யை கையில் எடுத்த இந்தியா.. செம திட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்க இருக்கும் நவீன டிரோன் வகை விமானங்களால் தற்போது இந்தியா தனது டிரோன் வர்த்தகத்தை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சீனாவிடம் பாகிஸ்தான் வாங்கும் இந்த டிரோன் மிகவும் நவீன வகை டிரோன் ஆகும்.

Recommended Video

    China- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்... Predator-B திட்டத்தை எடுத்த India

    இந்தியாவுடன் சீனா மோதலில் இருக்கும் நிலையில் தற்போது பாகிஸ்தான் உடன் அந்த நாடு மிகவும் நெருக்கமாக உள்ளது. காஷ்மீர் மற்றும் லடாக்கில் இந்தியாவிற்கு செக் வகையில் பாகிஸ்தான் மற்றும் சீனா இரண்டு நாடுகளும் மிகவும் நெருக்கமாக உள்ளது.

    இந்த நிலையில்தான் பாகிஸ்தானை சீனா ராணுவ ரீதியாக பலப்படுத்தி வருகிறது. பாகிஸ்தானில் ஒரு பக்கம் முதலீடுகளை அதிகரித்து வரும் சீனா, இன்னொரு பக்கம் அங்கு ராணுவ ரீதியாக குறைந்த விலையில் அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.

    இந்தியாவை தொடர்ந்து பூட்டான் எல்லைகளை ஆக்கிரமிக்க முயற்சி- சீனாவுக்கு கடும் கண்டனம் இந்தியாவை தொடர்ந்து பூட்டான் எல்லைகளை ஆக்கிரமிக்க முயற்சி- சீனாவுக்கு கடும் கண்டனம்

    என்ன விற்பனை

    என்ன விற்பனை

    இந்த நிலையில் சீனா தற்போது பாகிஸ்தானுக்கு அதி நவீன டிரோன் விமானங்களை அனுப்ப உள்ளது. டிரோன் என்பது மிகவும் சிறிய வகையிலான ஆள் இல்லாத விமானங்கள் ஆகும். இதன் மூலம் எதிரி நாட்டுக்குள், ரேடாரில் சிக்காமல் தாழ்வாக சென்று தாக்குதல் நடத்த முடியும். சத்தமே இல்லாமல் இதன் மூலம் ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்த முடியும். பாகிஸ்தான் சீனாவிடம் இதுபோன்ற டிரோன்களை வாங்க உள்ளது.

    என்ன டிரோன்

    என்ன டிரோன்

    அதன்படி பாகிஸ்தானில் சீனா கட்ட இருக்கும் எக்கனாமிக் காரிடார் எனப்படும் பொருளாதார மையம் மற்றும் பாகிஸ்தானின் க்வாடர் பகுதியில் இருக்கும் சீனாவின் ராணுவ தளம் இரண்டையும் பாதுகாக்கும் பொருட்டு சீனா இந்த டிரோன்களை பாகிஸ்தானுக்கு கொடுக்கிறது. சீனா பாகிஸ்தானுக்கு அளிக்க இருக்கும் டிரோன் பெயர் வாங் லாங் 11 (Wing Loong II) என்பது ஆகும்.

    அதிரடி மாற்றம்

    அதிரடி மாற்றம்

    இதற்கு ஜிஜே -2 (GJ-2) என்று பெயர் மாற்றம் செய்து இருக்கிறார்கள். இதை அப்டேட் செய்து சீனா பாகிஸ்தானுக்கு அளிக்க உள்ளது. மொத்தம் 48 டிரோன்களை பாகிஸ்தான் பெற இருக்கிறது. சீனா ஏற்கனவே சில ஆசிய நாடுகளுக்கு இதை விற்பனை செத்துள்ளது. முக்கியமாக பல அரபு நாடுகளுக்கு சீனா இதை விற்று உள்ளது. தற்போது இதை பாகிஸ்தானுக்கும் சீனா விற்பனை செய்ய உள்ளது .

    திறன் என்ன

    திறன் என்ன

    இந்த டிரோன் ஒரே நேரத்தில் 12 ஏவுகணைகளை தாக்க கூடிய திறன் கொண்டது ஆகும். அதேபோல் இதன் மூலம் தீவிர ரோந்து பணிகளையும் மேற்கொள்ள முடியும். இதைத்தான் பாகிஸ்தான் வாங்குகிறது. இதனால் தற்போது இந்தியா தனது டிரோன் வர்த்தகத்தை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சீனாவிடம் பாகிஸ்தான் வாங்கும் இந்த டிரோன் மிகவும் நவீன வகை டிரோன் ஆகும். இதனால் இந்தியாவும் நவீன டிரோன்களை வாங்க வேண்டி உள்ளது.

    இந்தியாவின் திட்டம்

    இந்தியாவின் திட்டம்

    இந்தியா ஏற்கனவே அமெரிக்காவிடம் பிரிடேட்டர்- பி ( Predator-B) டிரோன் வகைகளை வாங்க திட்டமிட்டு இருந்தது. இதற்கு பிளான் பிரிடேட்டர்- பி ( Predator-B) என்று கூட இந்தியா பெயர் வைத்து இருந்தது. ஆனால் அதன்பின் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அமெரிக்காவிடம் இருந்து பிரிடேட்டர்- பி ( Predator-B) டிரோன்களை இந்தியா வாங்க உள்ளது. ஆம் இந்தியா மீண்டும் பிளான் பிரிடேட்டர்- பி ( Predator-B) ஐ கையில் எடுத்துள்ளது.

    பிளான் என்ன

    பிளான் என்ன

    அமெரிக்காவிடம் இருந்து 20-40 பிரிடேட்டர்- பி ( Predator-B) டிரோன்களை வாங்குவதுதான் இந்த திட்டம். உலகில் இருக்கும் டிரோன்களின் அதிக சக்தி கொண்ட டிரோன்தான் பிரிடேட்டர்- பி ( Predator-B). இந்த டிரோன் ஒரு பக்கம் ரோந்து பணிகளை மேற்கொள்ளும். இன்னொரு பக்கம் அந்த லைவ் வீடியோவை ராணுவ தளத்திற்கு அனுப்பும். இன்னொரு பக்கம் அதி நவீன ஏவுகணை தாக்குதலை ரேடாரில் சிக்காமல் நடத்தும்.

    ஒரே தீர்வு

    ஒரே தீர்வு

    சீனா - பாகிஸ்தானின் கூட்டு காரணமாக பிரிடேட்டர்- பி ( Predator-B) யை வாங்குவது விட வேறு வழி இல்லை என்று இந்திய ராணுவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். பாகிஸ்தானின் டிரோன் இறக்குமதிக்கு இது மட்டுமே பதிலடியாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த பிரிடேட்டர்- பி ( Predator-B) டிரோன்தான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் டிரோன் தாக்குதலை நடத்தியது. ஈரானில் ராணுவ தளபதி குவாசம் சுலைமானியை சுட்டுக்கொன்றதும் பிரிடேட்டர்- பி ( Predator-B) டிரோன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    India - China standoff: Delhi to start Plan Predator - B again with US amid Pakistan's drone purchase.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X