டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சைகலாஜிக்கல் ஆபரேஷனை" கையில் எடுத்த சீனா.. அசால்ட்டாக கையாண்ட இந்தியா.. சாணக்கிய வியூகம்!

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் எல்லை பிரச்சனையில் சைகலாஜிக்கல் ஆபரேஷன் (Psychological operation) எனப்படும் உளவியல் ரீதியான தாக்குதல் ஒன்றை சீனா கடந்த ஒரு மாதமாக செய்து வந்திருக்கிறது.

சைகலாஜிக்கல் ஆபரேஷன் என்பது சீனாவின் போர் தந்திரங்களில் ஒன்றாகும். அந்நாட்டு Chinese War Zone Concept (WZC) எனப்படும் போர் பிரிவில் சைகலாஜிக்கல் ஆபரேஷன் மிக முக்கியமான பிரிவாக பார்க்கப்படுகிறது. மலேசியா, தைவான் என்று பல நாடுகளுக்கு எதிராக இந்த முறையை சீனா பயன்படுத்தி இருக்கிறது.

இந்தியாவின் பண்டையகால போர் முறையிலும் கூட இந்த சைகலாஜிக்கல் ஆபரேஷன் குறித்த விவரங்கள் இருக்கிறது. சாணக்கியர் எழுதிய போர் மற்றும் ஆட்சி முறை குறித்த புத்தகங்களில் கூட சைகலாஜிக்கல் ஆபரேஷன் குறித்த விவரங்கள் இருக்கிறது.

எல்லாம் சுயநலம்.. அமெரிக்காவால் இந்தியா முட்டாளாகக் கூடாது.. சீன ஊடகம் அட்வைஸ்! எல்லாம் சுயநலம்.. அமெரிக்காவால் இந்தியா முட்டாளாகக் கூடாது.. சீன ஊடகம் அட்வைஸ்!

சைகலாஜிக்கல் ஆபரேஷன் என்றால் என்ன

சைகலாஜிக்கல் ஆபரேஷன் என்றால் என்ன

சைகலாஜிக்கல் ஆபரேஷன் என்றால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். கிரிக்கெட் விளையாடும் போது பொதுவாக ஆஸ்திரேலிய பவுலர்கள் பந்து வீசிய பின் பேட்ஸ்மேனிடம் கோபமாக ஏதாவது கூறிவிட்டு அவர்களை வெறுப்பேற்றுவார்கள். sledging என்று அழைக்கப்படும் இந்த முறை மூலம் பேட்ஸ்மேன்களை பவுலர்கள் உளவியல் ரீதியாக தாக்குவார்கள். இதனால் குழம்பும் பேட்ஸ்மேன் தவறான ஷாட் அடித்து விக்கெட்டை பறிகொடுப்பார். இதே sledingஐ போர் களத்தில், எல்லை பிரச்சனையில் செய்வதுதான் சைகலாஜிக்கல் ஆபரேஷன்.

சீனா செய்தது

சீனா செய்தது

லடாக் எல்லை பிரச்சனை வந்ததும் சீனா உடனடியாக அது தொடர்பான விவரங்களை இணையத்தில் வெளியிட்டது அல்லது கசியவிட்டது. அதாவது லடாக்கில் சீனா எங்கெல்லாம் அத்து மீறி இருக்கிறது. எங்கு விமானப்படை தளம் அமைத்து இருக்கிறது. எங்கு படைகளை குவித்து உள்ளது என்று விவரங்கள் வெளியானது. இதற்கான சாட்டிலைட் புகைப்படங்கள், வீடியோக்கள் கூட வெளியானது.

ஏன் இப்படி வெளியானது

ஏன் இப்படி வெளியானது

சீனாவின் கடுமையான கட்டுப்பாடு இருக்கும் ராணுவத்தில் இருந்து இந்த வீடியோக்கள் கசிய வாய்ப்பு இல்லை. சீன ராணுவமே வேண்டும் என்று இதை வெளியிடாத பட்சத்தில் சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியே வந்து இருக்க வாய்ப்பு உள்ளது.இப்படி வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிடுவது ஒரு விதமான உளவியல் தாக்குதல் ஆகும். நாங்கள் உங்கள் நிலத்தில் ஆக்கிரமித்து இருக்கிறோம், படைகளை குவித்து இருக்கிறோம் என்று உளவியல் ரீதியாக கொடுக்கப்படும் அழுத்தம் ஆகும்.

டோக்லாம் போதே செய்தது

டோக்லாம் போதே செய்தது

எதிரி நாட்டை அதிர்ச்சி அடைய வைத்து, பதற்றம் அடைய வைத்து அதன்பின் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் யுக்தி ஆகும் இது. இந்த சைகலாஜிக்கல் ஆபரேஷனை இந்தியாவிடம் செய்து காரியத்தை சாதிக்கலாம் என்று சீனா நினைத்தது. டோக்லாம் சமயத்திலும் சீனா இப்படித்தான் இந்தியாவை சைகலாஜிக்கல் ஆபரேஷன் செய்து பயமுறுத்த பார்த்தது. ஆனால் அதை இந்தியா மிக கட்சிதமாக அதை எதிர்கொண்டது. இந்த முறையும் இந்தியா சீனாவின் சைகலாஜிக்கல் ஆபரேஷனை முறியடித்துள்ளது.

இந்தியா என்ன செய்தது

இந்தியா என்ன செய்தது

லடாக் பிரச்சனையில் சைகலாஜிக்கல் ஆபரேஷனை சீனா செய்ய தொடங்கியதும் இந்தியாவும் தனது ஸ்மார்ட் மூவை எடுத்து வைத்தது. இந்தியாவும் சீனாவை போலவே சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட தொடங்கியது. இந்தியா லடாக் எல்லையில் எவ்வளவு படைகளை குவித்து வருகிறது என்று செய்திகள் கசிய விடப்பட்டது. நீங்கள் மட்டும்தான் படைகளை குவித்து ஆக்கிரமிப்புகளை செய்வீர்களா நாங்களும் செய்வோம் என்று இந்தியா ஆதாரம் வெளியிட்டது.

எதிர்பார்க்கவில்லை

எதிர்பார்க்கவில்லை

அதோடு சீன வீரர்களை இந்தியா விரட்டும் சில வீடியோக்கள் கூட கசிந்தது. இதெல்லாம் போல சின்னூக் ஹெலிகாப்டர் , மிக் ரக விமானங்கள் என்று இந்தியா தனது படை பலத்தை எல்லைக்கு அருகே கொண்டு சென்று சீனாவிற்கு செக் வைத்தது. சீனாவின் சைகலாஜிக்கல் ஆபரேஷனுக்கு இந்தியா பதில் சைகலாஜிக்கல் ஆபரேஷன் செய்தது. சீனாவை உளவியல் ரீதியாக இந்தியாவும் தாக்கியது.

Recommended Video

    India China-சண்டைக்கு காரணமே America தான்..சொல்வது சீனா
    பணிய தொடங்கியது

    பணிய தொடங்கியது

    இதை அடுத்துதான் எல்லையில் சீனா தனது படைகளை 2 கிமீ தூரத்திற்கு திரும்ப பெற்றது. அதோடு பேச்சுவார்த்தைக்கும் ஒப்புக்கொண்டது. சீனாவிற்கு புரியும் மொழியிலேயே இந்தியா சீனாவிற்கு அதிரடி பதில் கொடுத்து இருக்கிறது. இதன் விளைவாக இன்று எல்லையில் இரண்டு நாட்டு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள்.

    English summary
    India China Standoff: How both countries used Psychological operation in the Ladakh issue and talks?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X