டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜதந்திரம்.. சீனா உடன் ராணுவ மட்டத்தில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை.. இந்தியா செம்ம திட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதியில் நடந்து வரும் மோதல் குறித்து தீர்வு காண இந்தியாவும் சீனாவும் இன்று காலை 9 மணிக்கு மோல்டோவில் ஆறாவது கார்ப்ஸ் கமாண்டர்-லெவல் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியாவின் பேச்சுவார்த்தை சக்தியை வலுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசின் பிரதிநிதியும் கூட்டத்தின் ஒரு பகுதியாக கலநது கொள்ள இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்திய அணியின் 14 கார்ப்ஸை லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா சார்பில் பி.எல்.ஏ மேஜர் ஜெனரல் லின் லியு பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார். இந்திய தூதுக்குழுவின் மற்ற உறுப்பினர்களில் வெளிவிவகார அமைச்சகத்தின் (எம்.இ.ஏ) இணைச் செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா மற்றும் மேஜர் ஜெனரல் அபிஜீத் பாபாட் மற்றும் மேஜர் ஜெனரல் பதம் சேகாவத் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐ.டி.பி.பி) இன்ஸ்பெக்டர் ஜெனரல் தீபம் சேத்தும் இந்திய ராணுவத்தின் நான்கு படைப்பிரிவுகளுடன் கூட்டத்தில் ஒரு பகுதியாக கலந்து கொள்ள உள்ளார்கள்.

நவீன் ஸ்ரீவஸ்தவா

நவீன் ஸ்ரீவஸ்தவா

வெளிவிவகார அமைச்சகத்தின் (எம்.இ.ஏ) இணைச் செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான (WMCC) செயல்பாட்டு குழுவில் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.

முக்கிய பேச்சு

முக்கிய பேச்சு

முந்தைய கார்ப்ஸ் கமாண்டர்-லெவல் பேச்சுவார்த்தைகளில் இடம் பெறாத டெப்சாங் இப்போது பேச்சுவார்த்தையில் இடம் பெற்றுள்ளது, சீனாவின் மிகப்பெரிய படை குவிப்பு காரணமாக பேசப்பட உள்ளது. ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இந்திய ராணுவம் மற்றும் சீன இராணுவம் (பி.எல்.ஏ) இடையே பதற்றத்தின் மையமாக இருந்த பங்கோங் த்சோவின் தென் கரை குறித்தும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

படை விலகல்

படை விலகல்

கால்வான், கோக்ரா போன்ற இடங்களில் படைவிலகல் செய்ய முடியும் என்றால், ஏன் பாங்காங் திசோ ஏரியில் செய்யப்படவில்லை என இந்தியா வாதத்தை முன்வைக்க வாய்ப்புள்ளது. இந்தியப் பிரதிநிதிகள் குழு அனைத்து எல்லைக்காட்டுப்பாட்டு கோட்டு பகுதியிலும் படைகளை விலகக்க வேண்டும் என சீனாவை கோருகிறது.

முக்கியமான பேச்சு

முக்கியமான பேச்சு

டெப்சாங்கிலிருந்து பாங்காங் த்சோவுக்கு சீனப் படைகளைத் திரும்பப் பெறுவதோடு, அனைத்து ரோந்துப் புள்ளிகளுக்கும் இந்தியப் படைககள் தங்கு தடையின்றி அணுக அனுமதிக்க்க வேண்டும் என்பது குறித்தும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படும். எல்லையில் வீரர்களின் எண்ணிக்கை குறித்து விதிக்கப்பட்ட நெறிமுறையை கண்டிப்பாக கடைப்பிடிப்பது விவாதத்திற்கான முக்கியமான கருப்பொருளாக இருக்கும்.

ஐந்து அம்ச திட்டம்

ஐந்து அம்ச திட்டம்

மாஸ்கோவில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் ஒப்புக் கொண்ட ஐந்து அம்ச ஒருமித்த கருத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்திய தூதுக்குழு இன்று வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
india and China are scheduled to hold a Corps Commander-level meet in Moldo at 9 am on Monday to deliberate on the ongoing standoff along the Line of Actual Control (LAC) in eastern Ladakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X