• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

குவிக்கப்பட்ட சீன ராணுவம்.. பின்வாங்கவில்லை.. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்றும் முயற்சி?

|

டெல்லி: இந்தியா-சீனா இடையேயான உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு (LAC) பகுதியில் சீன ராணுவம் பின்வாங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இப்படியே நிலைமை நீடித்தால் எல்லை மாற்றியமைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்று எச்சரிக்கிறார்கள் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.

கிழக்கு லடாக் எல்லை பகுதியில், கல்வான் பள்ளத்தாக்கில், சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்க முற்பட்டபோது இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

  China- வின் திட்டத்தை காட்டிக்கொடுத்த India- வின் உளவு Satellite

  இதன்பிறகு இருநாட்டு ராணுவ தளபதிகள் மட்டத்தில், நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது. இருப்பினும் இன்னமும் பல்வேறு பகுதிகளில் சீன ராணுவம் பின்வாங்காமல் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

  இந்தியாவுக்கு எதிராக உயிரி போர்... சீனா பாகிஸ்தான் ஒப்பந்தம்... அதிர வைக்கும் அறிக்கை!!

  சீன ராணுவம் குவிப்பு

  சீன ராணுவம் குவிப்பு

  பாங்காங் ஏரி பகுதியில் ஃபிங்கர் 4 முதல் 5 வரையிலான பகுதிகளில் சீன ராணுவம் பின்வாங்கி உள்ளது. அதே நேரம் மவுண்டன் ஸ்பவுர்ஸ் அல்லது ரிட்ஜ் லைன் என்று அழைக்கப்படக்கூடிய பகுதிகளில் இன்னமும் சீன ராணுவம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஃபிங்கர் 4 மற்றும் ஃபிங்கர் 8 பகுதிகளுக்கு இடைப்பட்ட இடங்களில் சீன ராணுவம் அமைத்துள்ள கட்டமைப்புகள் இன்னமும்கூட அகற்றப்படவில்லை.

  நான்கு சுற்று பேச்சுவார்த்தை

  நான்கு சுற்று பேச்சுவார்த்தை

  ஏரியின் கரைப் பகுதிகளில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. ஆனால் மவுண்டன் ரிட்ஜ் பகுதியில் வெறும் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் இரு நாட்டு ராணுவமும் நிறுத்தப்பட்டுள்ளன. இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான நான்காவது சுற்று பேச்சுவார்த்தை ஜூலை 14ஆம் தேதி நடைபெற்றது. 10 நாட்கள் கடந்துவிட்ட போதிலும் சீன ராணுவம் பின் வாங்குவதற்கான அறிகுறி தெரியவில்லை.

  ஒரு கிலோ மீட்டர் உள்ளே

  ஒரு கிலோ மீட்டர் உள்ளே

  இன்னும் சொல்லப்போனால் ஃபிங்கர் 5 மற்றும் ஃபிங்கர் 8 பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சீன ராணுவ பலம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா இதுபற்றி கூறுகையில், சீனா, மிக குறைந்த அளவில்தான் எல்லையில் படைகளை வாபஸ் பெற்றுள்ளது. எனவே ராணுவ தளபதிகள் அளவில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட போவது கிடையாது. மேலிடத்திலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.. பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.. உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மேற்கு நோக்கி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நகர்த்தி விட்டது சீனப் படை. எனவே எல்லைக் கட்டுப்பாடு கோடு மாறிவிடும் நிலை ஏற்பட்டுவிட கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  மறுப்பு

  மறுப்பு

  தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் உறுப்பினரும் முன்னாள் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் நரசிம்மன் இதுபற்றி கூறுகையில், இந்திய எல்லைப் பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரம்வரை சீன ராணுவம் நகர்ந்து வந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு சரியல்ல. இந்திய ராணுவத்தின், ரோந்துப் பணியை, சீனா தடுப்பது தற்காலிகமானதுதான். படைகள் பின் வாங்கும்போது ரோந்து பணிகளும் நடைபெற்றால் ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்றது போன்ற ஒரு மோதல் மீண்டும் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத்தான், ரோந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது சீனப் படைகள் பின்வாங்கக் கூடிய நடவடிக்கை முதல் கட்டத்தில் இருக்கிறது. இது மேலும் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  கடுமையான குளிர்

  கடுமையான குளிர்

  சீன படை குவிப்புக்கு பதிலடி அளிக்கும் விதமாக, இந்தியா ஏற்கனவே கூடுதல் ராணுவத்தை, கிழக்கு லடாக்கில் சீன எல்லையை நோக்கி நகர்த்தியுள்ளது. இந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து 14,000 அடிக்கும் உயரமான பகுதியாகும். குளிர் காலத்தில் இங்கு மைனஸ் 25 டிகிரி குளிர் நிலவும். இங்கு, 45,000 முதல் 50,000 வீரர்கள் நிறுத்தப்பட வேண்டியுள்ளது. எனவே, அதற்கான ஏற்பாடுகளை, இந்திய ராணுவம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கான திட்டமிடல் இப்போதே தொடங்கப்பட வேண்டும்.

  எல்லை நிலைமை

  எல்லை நிலைமை

  இரு நாட்டு எல்லைப் பகுதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் தற்போது ரோந்து செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. இதே நிலை நீடித்தால் தற்போது சீன ராணுவம் எதுவரை வந்து முகாமிட்டுள்ளதோ, அந்தப் பகுதிகளை, எல்லையாக வரையறுக்கும் நிலைமை நேரிடும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் பலரும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். எனவே ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை தவிர்த்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் அல்லது பிரதமர் அலுவலகம் போன்ற உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

   
   
   
  English summary
  There is no sign of Chinese military retreat in the Line of Control (LoC) between India and China.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X