டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி!

Google Oneindia Tamil News

டெல்லி: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உடன் இந்திய பிரதமர் மோடி இன்று வீடியோ கால் மூலம் பேசி வருகிறார். முக்கியமான விஷயங்களை இவர்கள் இருவரும் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

Recommended Video

    மோடியின் ராஜதந்திரம்... நிலைகுலைந்த சீனா

    இந்தியா தற்போது சீனாவிற்கு எதிராக பெரிய நாடுகளை ஒன்று திரட்ட முயன்று வருகிறது என்றுதான் கூற வேண்டும். சீனாவிற்கு எதிரான பிரச்சனையில் ஏற்கனவே அமெரிக்காவின் ஆதரவு இந்தியாவிற்கு உள்ளது. இதில் இலங்கை நடுநிலையுடன் இருக்கும் என்று ஏற்கனவே கூறிவிட்டது.

    இந்த நிலையில் சீனாவை கடுமையாக எதிர்த்து வரும் ஆஸ்திரேலியா உடன் இணைய இந்தியா முடிவு செய்துள்ளது. சீனா - ஆஸ்திரேலியா இடையே கொரோனா சண்டை, வர்த்தக போர் தொடங்கி பல்வேறு விஷயங்களில் பிரச்சனை நிலவி வருகிறது.

    அணு ஆயுதங்களை பயன்படுத்துங்கள்.. புடின் கொண்டு வந்த புது விதி.. ரஷ்யாவின் முடிவால் புதிய பரபரப்பு! அணு ஆயுதங்களை பயன்படுத்துங்கள்.. புடின் கொண்டு வந்த புது விதி.. ரஷ்யாவின் முடிவால் புதிய பரபரப்பு!

    என்ன மீட்டிங்

    என்ன மீட்டிங்

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உடன் இந்திய பிரதமர் மோடி இன்று வீடியோ கால் மூலம் பேசி வருகிறார். முக்கியமான விஷயங்களை இவர்கள் இருவரும் ஆலோசனை செய்து வருகிறார்கள். இரண்டு நாட்டு கடற் படைகள் ஒன்றாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்து இதில் ஆலோசனை செய்து வருகிறார்கள். அதேபோல் முக்கியமான பரஸ்பர ராணுவ ஆதரவு ஒப்பந்தம் (Mutual Logistic Support Agreement) என்ற ஒப்பந்தமும் செய்யப்பட உள்ளது.

    என்ன ஒப்பந்தம்

    என்ன ஒப்பந்தம்

    கடந்த வருடம் திட்டமிடப்பட்ட இந்த ஒப்பந்தம் இந்த வருடம் கையெழுத்தாகிறது. இதன் படி இரண்டு நாட்டு ராணுவ படைகளும் தங்களின் ராணுவ தளவாடங்களை பகிர்ந்து கொள்ளும். அதாவது ஆஸ்திரேலியாவின் ராணுவ தளவாடங்களை இந்தியா பயன்படுத்தலாம். இந்தியாவின் ராணுவ தளவாடங்களை ஆஸ்திரேலியா பயன்படுத்தலாம். இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.

    என்ன கடற்படை

    என்ன கடற்படை

    அதேபோல் இரண்டு நாட்டு கடற்படையும் சேர்ந்து ஆஸ்திரேலிய கடல் பகுதி மற்றும் இந்திய கடல் பகுதியில் பயிற்சி மற்றும் ரோந்து பணிகளை இணைந்து மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட உள்ளது.AUSINDEX என்ற பெயரில் கடந்த 2015 வருடமே இந்த பணிகள் நடந்த நிலையில், அதை மீண்டும் தொடர இருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஆஸ்திரேலியாவை மலபார் குழுவில் இணைக்க மோடி முயன்று வருகிறார்.

    மலபார் குழு

    மலபார் குழு

    மலபார் என்பது கேரளாவில் இருக்கும் மலபார் இல்லை. இது இந்தியா உருவாக்கிய மூன்று நாடுகளின் சக்தி வாய்ந்த ராணுவ குழு. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய மூன்று நாடுகள் உள்ள குழு ஆகும் இது. சீனாவை சமாளிக்கும் வகையில் இத குழு உருவாக்கப்பட்டது. கடல் பாதுகாப்பை மையப்படுத்தி இந்த குழு உருவாக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியாவை சேர்க்கும் வகையில் இன்று ஆலோசனை நடக்கும்.

    சீனாவிற்கு எதிரான படை

    சீனாவிற்கு எதிரான படை

    இந்த குழு உருவாக்கப்பட்ட போதே சீனா அதை கடுமையாக விமர்சனம் செய்தது. தற்போது அதில் ஆஸ்திரேலியாவும் சேரும் என்பதால் சீனாவிற்கு எதிரான பெரிய படையை இந்தியா திரட்டுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. இன்று நடக்கும் இரண்டு நாட்டு பிரதமர் ஆலோசனையில் சைபர் செக்கியூரிட்டி குறித்தும் ஆலோசனை செய்ய இருக்கிறார்கள். இது மிகவும் முக்கியமான மீட்டிங்காக பார்க்கப்படுகிறது.

    English summary
    India - China Standoff: PM Modi talks with the Australian counterpart on logistic partnership.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X