டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லடாக் மக்களா.. மோடியா.. யாரோ ஒருவர் பொய் சொல்றாங்க.. வீடியோவை காட்டி ராகுல் காந்தி கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: சீனா தங்கள் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பதாக லடாக் மக்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஒன்றும் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். இதில் யார் பொய் சொல்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி.

Recommended Video

    Rahul Gandhi Wrong Timing

    முன்னறிவிப்பு ஏதுமின்றி இன்று லடாக் பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். அங்கு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ராணுவ வீரர்கள் மத்தியில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றியிருந்தார்.

    இது இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளிலும் கவனத்தை ஈர்த்தது. யாரும், மோதலை தூண்டக் கூடாது என சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

    சீனாவுக்கு மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகளுக்கும் மோடி கொடுத்த மெசேஜ்.. லடாக் விசிட் பின்னணியில் 5 காரணம்சீனாவுக்கு மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகளுக்கும் மோடி கொடுத்த மெசேஜ்.. லடாக் விசிட் பின்னணியில் 5 காரணம்

    பாஜக ஆதரவாளர்கள் பாராட்டு

    பாஜக ஆதரவாளர்கள் பாராட்டு

    மோடியின் இந்த செயல் தைரியம்மிக்கது என்று சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், தனது உரையின் போது சீனா என்ற பெயரை மோடி உச்சரிக்கவில்லை என்று எதிர் கட்சியினரும், சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    வீடியோ

    வீடியோ

    இந்த நிலையில்தான், ராகுல் காந்தி தனது ட்விட்டர் கணக்கில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் லடாக் பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் அங்கு சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறக்கூடிய காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வீடியோ லடாக் பகுதியில்தான் எடுக்கப்பட்டது என்பதை உணர்த்தும் வகையில் அவர்கள் பேசுவது பெரும்பாலும் வெளிப்புற இடங்களில் வைத்து படமாக்கப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தி ட்வீட்

    இதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து உள்ள ராகுல்காந்தி. சீனா எங்களது நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டது என்று லடாக் மக்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், பிரதமர், யாருமே நமது நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் கூறுகிறார். கண்டிப்பாக இதில் யாரோ பொய் சொல்கிறார்கள். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்கள் பொய் சொல்கிறார்கள் என்று பாஜகவினர் பதில் பேச முடியாது என்பதால் இதுபோன்ற ஒரு கேள்வியுடன் தனது ட்வீட்டை முடித்துக் கொண்டுள்ளார் ராகுல்காந்தி.

    பிரதமர் பதில்

    பிரதமர் பதில்

    இதையடுத்து, பிரதமர் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும் என்னும் பொருள்படும் வகையில் #PMMustAnswer என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரண்ட் செய்யப்பட்டது. அதில், நமது நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதா என்பதை மக்களுக்கு பிரதமர் தெரியப்படுத்த வேண்டும். நமது தரப்பில் இருந்து ராணுவ வீரர்கள், சீன நாட்டு ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு நீதி கிடைக்க இந்தியா என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற வாசகங்களுடன் இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது.

    English summary
    Ladakhis say: China took our land, PM says: Nobody took our land. Obviously, someone is lying, says Rahul Gandhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X