டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிரிக்கு எதிரி நண்பன்.. இந்தியாவின் ராஜதந்திரத்தால் நிலைகுலைந்த சீனாவின் கனவு.. தொடர் திருப்பங்கள்!

இந்தியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் சீன அரசு மொத்தமாக நிலைகுலைந்து போய் இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் சீன அரசு மொத்தமாக நிலைகுலைந்து போய் இருக்கிறது. இந்தியாவின் சரியான ராஜாங்க நடவடிக்கைகள் சீனாவை பதற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது..

Recommended Video

    மோடியின் ராஜதந்திரம்... நிலைகுலைந்த சீனா

    இந்தியா - சீனா பிரச்சனையில் தற்போது இந்தியாவின் பக்கம் காற்று வீச தொடங்கி உள்ளது. இந்தியா சீனா எல்லை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து சரியாக ஒரு மாதம் ஆகிவிட்டது. லடாக்கில் கடந்த மாதம் 5ம் தேதி சீன ஹெலிகாப்டர் எல்லை மீறியது.

    அப்போது தொடங்கிய சண்டை தற்போது லடாக்கில் எல்லை மீறி உள்ளது. இந்த பிரச்சனையை இந்தியா ராஜாங்க ரீதியாக எதிர்கொள்ள இருக்கிறது.

     யாரிடம் எத்தனை போர் விமானங்கள்.. படை வீரர்கள் எண்ணிக்கை எப்படி? இந்தியா-சீனா ராணுவ பலம்- முழு விவரம் யாரிடம் எத்தனை போர் விமானங்கள்.. படை வீரர்கள் எண்ணிக்கை எப்படி? இந்தியா-சீனா ராணுவ பலம்- முழு விவரம்

    இலங்கை பேச்சு

    இலங்கை பேச்சு

    இந்தியா சீனா பிரச்சனை வந்த போதே முதல் வேலையாக பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உடன் பேசினார். இலங்கை சீனா இரண்டும் நட்பு நாடுகள். போர் என்று ஒன்று வந்தால் இலங்கை மூலம் தென்னிந்தியாவை சீனா நெருக்கும். இதனால் முதல் வேலையாக பிரதமர் மோடி இலங்கை அதிபர் உடன் பேசினார். இலங்கையில் முதலீடுகளை செய்வோம் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.

    முதலீடு

    முதலீடு

    அதேபோல் இந்திய தனியார் நிறுவனங்களை இலங்கையில் தொடங்க வகை செய்வேன் என்றும் மோடி உறுதி அளித்தார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரும் இதேபோல் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் உடன் பேச்சுவார்த்தையில் இருந்தார். இதையடுத்துதான் இந்திய - சீன பிரச்சனையில் இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது.

    இனி நடுநிலை

    இனி நடுநிலை

    இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பேட்டியில், நாங்கள் அணி சேரா நாடாக இருக்க போகிறோம். இந்தியா - சீனா இரண்டும் எங்கள் நட்பு நாடுகள். யாரையும் நாங்கள் எதிர்க்க போவதில்லை என்று கூறினார். போர் வந்தால் இலங்கை தங்களை ஆதரிக்கும் என்று கனவு கண்ட சீனாவிற்கு இது பெரிய ஏமாற்றமாக மாறியது. இலங்கை இப்படி நடுநிலையான முடிவை எடுக்கும் என்று சீனா கொஞ்சமும் நினைக்கவில்லை.

    அமெரிக்கா உறவு

    அமெரிக்கா உறவு

    அதேபோல் இன்னொரு பக்கம் அமெரிக்கா உடன் இந்தியா மிகவும் நெருக்கம் ஆனது. சீனாவை எதிர்க்கும் வகையில் அமெரிக்கா உடன் டிரம்ப் கூட்டு சேர்ந்தார். அதோடு சீனா தொடர்பாக பிரதமர் மோடி இரண்டு முறை அதிபர் டிரம்ப் உடன் போனில் பேசி இருக்கிறார். நேற்று மட்டும் 20 நிமிடம் சீனா குறித்து டிரம்ப் உடன் மோடி போனில் பேசி உள்ளார். இதற்கு பின்தான் டிரம்ப் சீனாவின் பயணிகள் விமானங்களை அமெரிக்காவில் தடை செய்யும் முடிவிற்கு வந்தார்.

    ஜி7 நாடுகள்

    ஜி7 நாடுகள்

    அதோடு சீனாவிற்கு எதிராக இந்தியா ஜி7 நாடுகளில் சேர உள்ளது. அமெரிக்காவின் அழைப்பை ஏற்று ஜி7 குழுவில் இந்தியா இணைய உள்ளது. இந்த அழைப்பை இன்னும் ரஷ்யா ஏற்காத நிலையில், இந்தியா முதல் ஆளாக ஜி7ல் இணையும் முடிவை எடுத்து உள்ளது. ஜி7ல் இணையும் அளவிற்கு இந்தியா அதிரடியாக களமிறங்கி முடிவுகளை எடுப்பது சீனாவை கலங்க வைத்துள்ளது.

    ஆஸ்திரேலியா முடிவு

    ஆஸ்திரேலியா முடிவு

    கடைசியாக சீனாவை நிலைகுலைய வைத்த இன்னொரு விஷயம் இன்று நடந்தது. அதன்படி இந்திய பிரதமர் மோடி திடீர் என்று ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் உடன் ஆலோசனை செய்தார் . இரண்டு நாட்டு ராணுவமும், கடற்படையும் ஒன்றாக சேர்ந்த செயல்படும் இரண்டு ஒப்பந்தங்களை இதில் கையெழுத்திட்டனர். இந்தியாவிற்கு ராணுவ ரீதியான உதவிகளை செய்ய ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

    பரம எதிரி

    பரம எதிரி

    கொரோனா வைரஸ் பிரச்சனை, தென் சீன கடல் பிரச்சனை, ஹாங்காங் பிரச்சனை, வர்த்த போர் என்று பல விஷயங்களில் சீனாவும் ஆஸ்திரேலியாவும் மோதி வருகிறது. இந்த நிலையில் சீனாவின் பரம வைரி ஆஸ்திரேலியா உடன் இந்தியா கை கோர்த்து இருக்கிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவை இந்தியாவின் நடவடிக்கை கடும் அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.

    சீனாவின் கனவு

    சீனாவின் கனவு

    ஆனால் சீனாவால் ராஜாங்க ரீதியாக எதுவும் செய்ய முடியவில்லை. ரஷ்யா, தென் கொரியாவை விட சீனாவிற்கு பெரிய ஆதரவு இல்லை. ரஷ்யாவும் எப்போது வேண்டுமானாலும் சீனாவிடம் இருந்து கழன்று கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவின் ராஜதந்திர ரீதியான பேச்சுக்கள், ஆலோசனைகளில் சீனா நிலைகுலைந்து போய் உள்ளது. ஆசியாவின் அண்ணன் ஆகும் சீனாவின் கனவு கலைய தொடங்கி உள்ளது.

    English summary
    India - China Standoff: The diplomatic moves of Elephant thrashes Dragon in a month old fight.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X