டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடியவே முடியாது.. சீனா வைத்த "அந்த" கோரிக்கை.. அதிரடியாக மறுத்த இந்தியா.. நேற்று என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா - சீனா இடையே நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் சீன வைத்த முக்கியமான ஒரு கோரிக்கைக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

Recommended Video

    சின்ன தாக்குதல் கூட இல்லாமல் சமாளித்த இந்தியா

    லடாக் எல்லை பிரச்சனை குறித்து நேற்று சீனாவும் இந்தியாவும் ஆலோசனை செய்தது. லடாக் பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வரும் நிலையில் இந்த ஆலோசனை செய்யப்பட்டது. நேற்று இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே சீனாவின் ஷுசுல் மோல்டோ பகுதியில் பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்தியாவின் ராணுவப் படையின் 14வது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் எல்லைக்கு சென்று இந்த பேச்சுவார்த்தையை நடத்தினார். சீனா சார்பாக சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    இந்தியா-சீனா எல்லை விவகாரம்- ஆதாரமற்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிட கூடாது- பாதுகாப்பு அமைச்சகம் அட்வைஸ்இந்தியா-சீனா எல்லை விவகாரம்- ஆதாரமற்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிட கூடாது- பாதுகாப்பு அமைச்சகம் அட்வைஸ்

    எல்லை கட்டுமானம்

    எல்லை கட்டுமானம்

    இந்த ஆலோசனையின் இரண்டு நாட்டு எல்லை கட்டுமானங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த சண்டைக்கு காரணமே இரண்டு நாடுகளும் எல்லையில் செய்த கட்டுமான பணிகள்தான் என்றும் கூட கூறலாம். பாங்காங் திசோ பகுதியில் மொத்தம் 8 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது. பிங்கர்கள் (fingers) என்று அழைக்கப்படும் 8 பகுதிகளில் 4 இடங்களில் இந்தியா கட்டுப்படுத்துகிறது. 4 இடங்களில் சீனா கட்டுப்படுத்துகிறது.

    சண்டைக்கு காரணம்

    சண்டைக்கு காரணம்

    இதில் 4 பிங்கர்கள் வரை இந்தியா நிறைய கட்டுமானங்களை செய்து இருக்கிறது. கல்வான் பகுதியில் எல்லை வரை இந்தியா நிறைய கட்டுமானங்களை செய்து இருக்கிறது. இங்கு சீனாவும் கட்டுமான பணிகளை செய்து வருகிறது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிங்கர் 4 பகுதியில் எல்லை மீறி சீனா கட்டுமானங்களை செய்து இருக்கிறது. சாலைகள் அமைக்கும் பணிகளை செய்து உள்ளது.

    நீக்க வேண்டும்

    நீக்க வேண்டும்

    சீனாவின் இந்த செயல்தான் சண்டைக்கு காரணமாக மாறியது. இந்த நிலையில் சீனாவின் இந்த கட்டமானங்களை தகர்த்து எரிய வேண்டும் என்று சீனாவிடம் இந்தியா நேற்று கோரிக்கை வைத்தது. எல்லை மீறி கட்டப்பட்டு இருக்கும் கட்டுமானங்களை சீனா உடனடியாக இடிக்க வேண்டும். பிங்கர் 4 பகுதியில் கட்டுமான பணிகளை நிறுத்திவிட்டு செல்ல வேண்டும் என்று சீனாவிற்கு இந்தியா கோரிக்கை வைத்தது.

    உடனே உடைக்க வேண்டும்

    உடனே உடைக்க வேண்டும்

    இதை சீனா ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இது தொடர்பாக சீனா இன்னும் முடிவுகளை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று நடந்த மீட்டிங்கில் இந்தியாவும் எல்லை அருகே தனது கட்டுமான பணிகளை நீக்க வேண்டும் என்று சீனா கோரிக்கை வைத்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா செய்யும் கட்டுமான பணிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும். உடனே அந்த கட்டுமானங்களை உடைக்க வேண்டும் என்று சீனா கோரிக்கை வைத்தது.

    மறுத்து இருக்கிறோம்

    மறுத்து இருக்கிறோம்

    ஆனால் சீனாவின் இந்த கோரிக்கையை அங்கேயே இந்தியா மறுத்து இருக்கிறது. இந்த கட்டுமானங்கள் எதுவும் எல்லை மீறி கட்டப்படவில்லை. எல்லாம் இந்தியாவிற்குள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கிறது. இரண்டு நாட்டு எல்லையை மதித்து, உறவை மதித்தே இந்த சாலைகள் கட்டப்பட்டு இருக்கிறது. இதில் சீனாவை சீண்டும் எண்ணம் இந்தியாவிற்கு இல்லை. 4 பிங்கர் பகுதியை தாண்டி எங்கும் கட்டுமானம் நடக்கவில்லை.

    கிராமங்கள் முக்கியம்

    கிராமங்கள் முக்கியம்

    இந்த கட்டுமான பணிகள் எல்லாம் அங்கிருக்கும் கிராமங்களை முன்னேற்ற மட்டும்தான். அங்கிருக்கும் கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றுதான் இந்த பணிகளை செய்து வருகிறோம். ராணுவ ரீதியான பணிகள் எதையும் நாங்கள செய்யவில்லை என்று இந்தியா கூறியுள்ளது. இந்த இரண்டு நாட்டு அமைதி பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    India China Standoff: The elephant didn't accept to raze off construction in border against Dragon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X