டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லடாக் ஷாக் ஓயாத நிலையில்.. இந்திய-சீன ராணுவத்தினர் மோதல், கைகலப்பு.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கைகலப்பு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கக் கூடிய புதிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    India-China clash Video | இந்திய-சீன ராணுவத்தினர் மீண்டும் மோதல்? |Unverified video on social media

    லடாக் பகுதியில் சீன ஆக்கிரமிப்பை தடுக்க முற்பட்டபோது இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு முன்பாக கல்வான் மற்றும் லடாக்கின் கிழக்கில் பல்வேறு பகுதிகளில் இரு நாட்டு ராணுவத்தினரும் நேருக்கு நேர் கைகலப்பில் ஈடுபட்டு கொண்டனர்.

    இது தொடர்பாக அப்போது சில வீடியோக்கள் வெளியாகி இருந்தன. ஆனால் அதன்பிறகான நிலவரம் பற்றி வீடியோ வெளியாகவில்லை.

    3 தனி தனி பிரிவுகள்.. லடாக் எல்லையில் இந்திய ராணுவம் அமைத்த 3 தனி தனி பிரிவுகள்.. லடாக் எல்லையில் இந்திய ராணுவம் அமைத்த "வளையம்''.. சீனா இனி நெருங்க முடியாது!

    இந்தியா- சீனா கமாண்டர்கள் பேச்சுவார்த்தை

    இந்தியா- சீனா கமாண்டர்கள் பேச்சுவார்த்தை

    இந்தநிலையில் லடாக் பகுதியில் இந்திய வீரர்கள் உயிரிழந்த பிறகு முதல்முறையாக ஜூன் 23ஆம் தேதி திங்கள்கிழமை, இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது. இந்த நிலையில்தான் ஒரு வீடியோ சில ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

    தள்ளிப்போங்கள்

    தள்ளிப்போங்கள்

    இந்த வீடியோவில், சீன ராணுவத்தினரை நோக்கி, "இங்கிருந்து தள்ளிப் போங்கள்" என்று இந்திய ராணுவ வீரர்கள் கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அதை மதிக்காமல், இந்திய ஜவான்களை நோக்கி சீன ராணுவ வீரர் ஒருவர் கையை முறுக்கி வந்து தள்ளுவதும் அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    சிக்கிம் பகுதி

    சிக்கிம் பகுதி

    இதையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் பலரும் சூழ்ந்துகொண்டு மேலும் தாக்குதல் நடைபெறாமல் தடுக்கின்றனர். இந்த காட்சி எப்போது வீடியோவாக எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் நிலவியல் நிபுணர்கள் கருத்துப்படி இது சிக்கிம் பகுதியில் நடைபெற்றிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    மாஸ்க் அணிந்துள்ள வீரர்கள்

    மாஸ்க் அணிந்துள்ள வீரர்கள்

    மோதலில் ஈடுபட்ட இரு நாட்டு ராணுவ வீரர்களும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அணியக்கூடிய முகக் கவசங்கள் அணிந்து உள்ளனர். எனவே இந்த வீடியோ சமீபத்தில்தான் எடுக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. 5.30 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சிகள் தொடர்பாக அரசு இன்னமும் விளக்கம் அளிக்கவில்லை.

    பல பகுதிகளில் மோதல்

    பல பகுதிகளில் மோதல்

    லடாக் பகுதியில் மட்டுமின்றி, இந்தியா, சீனா எல்லை வரை பகுதிகளின் பல இடங்களிலும் இரு நாட்டு ராணுவ வீரர்களும் கைகலப்பு மற்றும் மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதற்கான மற்றுமொரு சாட்சியமாக இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    India China face off , Video of clash between Indian, Chinese troops emerges in Sikkim.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X