டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வழிக்கு வரும் சீனா.. இந்தியாவின் அதிரடி கோரிக்கை.. அமைதி பேச்சுவார்த்தையில் நடந்த நல்ல திருப்பம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா சீனாவின் ராணுவ அதிகாரிகள் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் அமைதிக்கான முதல் படி எடுத்து வைக்கப்பட்டு இருக்கிறது. நேற்றைய மீட்டிங் நல்ல வகையில் முடிந்து இருக்கிறது என்று இரண்டு நாட்டு ராணுவ தரப்பு கூறியுள்ளது.

Recommended Video

    இந்தியா-சீனா பேச்சுவார்த்தை..லடாக் எல்லை பிரச்சினை தீர்வு எட்டப்படுமா?

    இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை பிரச்சனையில் நேற்று மிக முக்கியமான நாளாகும். லடாக்கில் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வந்தது. அங்கு படைகளையும், நவீன ஆயுதங்களையும் குவித்து வந்தது. இதனால் இந்தியாவும் பதிலடிக்கு எல்லையில் படைகளை குவித்து வந்தது.

    இந்த நிலையில் போர் பதற்றம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டது. இதை அடுத்து நேற்று இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே சீனாவின் ஷுசுல் மோல்டோ பகுதியில் பேச்சுவார்த்தை நடந்தது.

    திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

    யார் பேசினார்கள்

    யார் பேசினார்கள்

    இந்தியாவின் ராணுவப் படையின் 14வது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் எல்லைக்கு சென்று இந்த பேச்சுவார்த்தையை நடத்தினார். சீனா சார்பாக சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். நேற்று 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 5 மணி நேரம் நடத்தது. இரண்டு தரப்பும் இடையில் ஒன்றாக மதிய உணவு உட்கொண்டார்கள்.

    என்ன அறிக்கை

    என்ன அறிக்கை

    இந்த மீட்டிங்கை தொடர்ந்து இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகமும் ஒன்றாக அறிக்கை வெளியிட்டிள்ளனர். அது சிறிய செய்தி அறிக்கையில், இரண்டு நாட்டு உறவில் தற்போது இருக்கும் நிலை குறித்து இன்று ஆலோசனை செய்தோம். இரண்டு நாட்டுக்கும் இடையில் அமைதி , நிலையான தன்மை, சரியான உறவு இருக்கும் வகையில் பணிகளை செய்ய வேண்டும். உலக அளவில் நிலவும் தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை செய்தோம் என்று கூறப்பட்டு இருக்கிறது.

    வேறு சில விஷயம்

    வேறு சில விஷயம்

    அதேபோல் இரண்டு நாட்டு உணர்வுகளை மதிக்க வேண்டும். இரண்டு நாட்டின் நோக்கங்களை புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு நாட்டின் அதிபர், பிரதமர் ஆகியோர் வழிகாட்டுதலின் படி நாம் செயல்பட வேண்டும் என்று இரண்டு நாட்டு செய்தி அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா சீனாவின் ராணுவ அதிகாரிகள் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் அமைதிக்கான முதல் படி எடுத்து வைக்கப்பட்டு இருக்கிறது. நேற்றைய மீட்டிங் நல்ல வகையில் முடிந்து இருக்கிறது என்று இரண்டு நாட்டு ராணுவ தரப்பு கூறியுள்ளது.

    அமைதி முக்கியம்

    அமைதி முக்கியம்

    இந்த ஆலோசனையில் இந்தியா சீனாவிடம் முக்கியமான மூன்று கோரிக்கைகளை வைத்தது. அதன்படி எல்லையில் சீனா படைகளை திரும்ப பெற வேண்டும், நவீன ஆயுதங்களை திரும்ப பெற வேண்டும். பங்கர்களை அகற்ற வேண்டும். எல்லைக்கு அருகே முறையற்ற கட்டுமானங்களை நீக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை வைத்தது. சீனாவும் இந்தியா, தனது கட்டுமானங்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

    ஏற்றுக் கொண்டது

    ஏற்றுக் கொண்டது

    ஆனால இந்த கோரிக்கையை இரண்டு நாடுகளும் ஏற்கவில்லை.ஆனால் இது தொடர்பாக பரிசீலிக்க முடிவு செய்துள்ளது . மே 5ம் தேதிக்கு முன் இருந்த நிலையை மீண்டும் கொண்டு வர இரண்டு நாடுகளும் ஆலோசித்து வருகிறது. இதுவரை நடந்த 12 ஆலோசனை கூட்டங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்தது. ஆனால் நேற்று நடந்த ஆலோசனை கூட்டம் நேர்மறையாக முடிந்துள்ளது. போக போக நல்ல செய்திகள் வரும் என்கிறார்கள்.

    முக்கியம்

    முக்கியம்

    இதற்கு முன் நடந்த பேச்சுவார்த்தைகள் போல இது இல்லை. சீனா கொஞ்சம் இந்த முறை அமைதியாகவே பேசி இருக்கிறது. சர்வதேச அழுத்தம் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் சீனா மொத்தமாக பின் வாங்கிவிட்டது என்று கூற முடியாது. இப்போதுதான் அமைதி என்ற வழிக்கு சீனா வந்து இருக்கிறது. இனி வரும் நாட்களில் போக போக நிலைமை மாறும்.

    தொடரும் மீட்டிங்

    தொடரும் மீட்டிங்

    அதே சமயம் இந்த ஒரே மீட்டிங் மூலம் எல்லை பிரச்சனை முடிவிற்கு வந்துவிடாது. எல்லை பிரச்சனையை தீர்க்க இன்னும் நிறைய பிரச்சனைகள் பேச வேண்டும். நிறைய முறை எல்லையில் ஆலோசனைகளை செய்ய வேண்டும். இப்போது நடந்த ஆலோசனை கூட்டம் அதற்கு ஒரு நல்ல முதற்படி என்று கூறுகிறார்கள். இந்தியா டோக்லாம் பிரச்னையை இப்படித்தான் கையாண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    India China Standoff: Yesterday meeting ends with positive trajectory in the Ladakh border issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X