டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரவுண்டு 8... இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சு.. நவம்பர் 6ல்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா, சீனா ராணுவ அதிகாரிகளின் உயர் மட்ட அளவிலான 8வது சுற்று பேச்சுவார்த்தை நவம்பர் 6ம் தேதி நடைபெறலாம் என்று தெரிகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே கிழக்கு லடாக்கில் இரு நாட்டு ராணுவத்தினருக்கு இடையே நீடித்து வரும் மோதல் போக்கை மேலும் சரி செய்யும் வகையில் இந்தப் பேச்சுக்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India China to have 8th round of Military talks on November 6

இதுவரை நடந்த பேச்சுக்களின் இறுதியாக இதுவரை பெரிய நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த 7 மாதமாக தொடர்ந்து எல்லைப் பகுதி பரபரப்பாகவே காணப்படுகிறது. இருப்பினும், இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே சுமூக நிலை ஏற்படுவதற்கு பேச்சுவார்த்தையே சரியான வழி என்பதை இரு நாட்டு அரசுகளும் உணர்ந்து ஒப்புக் கொண்டு அதன்படி பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றன.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்.. மானாவாரி அழகுடன்.. அப்படியே அம்சமாக.. யார்னு தெரியுதா.. திடீர் வைரல்!ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்.. மானாவாரி அழகுடன்.. அப்படியே அம்சமாக.. யார்னு தெரியுதா.. திடீர் வைரல்!

கடைசியாக அக்டோபர் 12ம் தேதி நடந்த சுசுல் பேச்சுவார்த்தையின்போது 11 மணி நேரம் அளவுக்கு இரு தரப்பும் நீண்ட பேச்சுவார்த்தையை நடத்தின. அதில் பல புதிய திட்டங்கள் தீர்மானிக்கப்பட்டன. இருப்பினும் கிழக்கு லடாக்கில், எல்லைக் கோட்டுப் பகுதியில் சீனப் படையினர் முழுமையாக விலக வேண்டும் என்பதே இந்தியாவின் ஒரே கோரிக்கையாகும். அதற்கு சீனா ஒத்துவராமல் பிடிவாதம் பிடிப்பதால்தான் இழுபறி நீடிக்கிறது.

India China to have 8th round of Military talks on November 6

முதல்ல நீங்கதான் ஊடுறுவி வந்தீங்க. அதைத் தடுக்கவே நாங்களும் தலையிட்டோம்.. எனவே நீங்கள்தான் முதலில் விலக வேண்டும். பிறகுதான் நாங்க படைகளைக் குறைக்க முடியும் என்பதை இந்தியா, சீனாவிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இரு தரப்பிலும் தலா சுமார் 50,000க்கும் மேலான படை வீரர்கள், போர்த் தளவாடங்கள், பீரங்கிகள், கனரக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளன என்பது நினைவிருக்கலாம்.

English summary
India China may have 8th round of Military talks on November 6.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X