டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் 20 லட்சம் பேரை எட்டப்போகும் கொரோனா - 12,82,215 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது. இந்தியாவில் 1960865 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது. இந்தியாவில் 1960865 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து 12,82,215 பேர் குணமடைந்துள்ளனர். கொரேனாவிற்கு நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.89 கோடியாக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் 7.10 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். 1.21 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசிலில் ஒரே நாளில் 54 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் 97 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், பிரேசிலில் 30 லட்சம் பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உலக அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 262,560 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

India COVID-19 cases jumps to 1,963,239 on today

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில், அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.

இந்தியாவில் தினசரியும் நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் இன்று வரை தினசரியும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே இந்தியாவில் கொரோனாவிற்கு பதிக்கப்பட்டோர் என்ணிக்கை 1,963,239 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் ஜி.சி முர்மு- புதிய ஆளுநரானார் மனோஜ் சின்ஹாஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் ஜி.சி முர்மு- புதிய ஆளுநரானார் மனோஜ் சின்ஹா

இந்தியாவில் கொரோனாவிற்கு 40ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனாவிற்கு 4,68,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 273,000 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் 1,76,333 பேரும், கர்நாடகாவில் 1.50 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
India With another such spike on Wednesday, the tally of total cases has jumped to 1,963,239. India has been recording over 50,000 cases daily since July 28.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X