டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டு வரும் இந்தியா.. புது ரெக்கார்டு.. மீண்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஞாயிறு அன்று ஒரே நாளில் 54,859 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரம் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, நேற்று ஒரு நாளில் 53,601 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிப்பு 22,15,074 லிருந்து 22,68,675 ஆக அதிகரித்துள்ளது.

India crosses 1.5 million recoveries from covid

ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவால் 871 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழப்பு 44,386 லிருந்து 45,257 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15,83,490 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 70 சதவீதம் நோயில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பபட்ட நிலையில் சுமார் 6.39 லட்சம் பேர் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பசங்களா! ஹேப்பி நியூஸ்!.. டிசம்பர் மாதம் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாது.. மத்திய அரசு உறுதிபசங்களா! ஹேப்பி நியூஸ்!.. டிசம்பர் மாதம் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாது.. மத்திய அரசு உறுதி

இந்தியாவில் இதுவரை 2,52,81,848 சாம்பிள்கள் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி ஒரு நாளில் மட்டும் 6,98,290 சாம்பிள்கள் நாடு முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா உயரிழப்பு விகிதம் 2 சதவீதம் ஆக உள்ளது. ஒரு சதவீதத்திற்குள் கொண்டுவர அரசு முயற்சித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு விவகாரத்தில் உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் குறைவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்தமே இப்போது 28.66% ஆக்டிவ் நோயாளிகள் தான் நாட்டில் இருக்கிறார்கள்.

English summary
India crosses 1.5 million recoveries, single-day recoveries of 54,859 on Sunday (according to the ministry’s database), the national recovery rate among Covid-19 patients has now touched almost 70%. The total number of COVID19 samples tested up to 10th August is 2,52,81,848 including 6,98,290 samples tested yesterday .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X