டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரு தவணை தடுப்பூசி- விரைவில் 100 சதவீதம்?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 50 சதவீதம் பேருக்கு இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 127.61 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவை வெல்ல தடுப்பூசி ஒன்றே முக்கிய ஆயுதம் என சொல்லப்பட்டு வரும் நிலையில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 100 கோடி டோஸ் தடுப்பூசி இலக்கை அடைந்து இந்தியா சாதனை படைத்தது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தற்போது வரை இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கேரளாவில் 15 வயது மாணவிகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி... செவிலியர் சஸ்பெண்ட்... விசாரணைக்கு உத்தரவு கேரளாவில் 15 வயது மாணவிகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி... செவிலியர் சஸ்பெண்ட்... விசாரணைக்கு உத்தரவு

50 சதவீதம்

50 சதவீதம்

நேற்றைய தினம் வரை இந்தியாவில் 1.03 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடைய 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர். 21.38 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் மாநில அரசுகளிடம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி பீகாரில் 15.33 லட்சம் பேருக்கும் தமிழகத்தில் 14.84 லட்சம் பேருக்கும் ராஜஸ்தானில் 10.8 லட்சம் பேருக்கும் உத்தரப்பிரதேசத்தில் 10.24 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள்

18 வயதுக்கு மேற்பட்டவர்கள்

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர். 50.35 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டனர். இந்தியாவில் கொரோனாவால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 99,974 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த மார்ச் 2020 ஆம்ஆண்டிலிருந்து குறைவாகும்.

தினசரி கொரோனா

தினசரி கொரோனா

கடந்த 61 நாட்களாக தினசரி கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் 2 சதவீதத்திற்கு கீழ் உள்ளது. கடந்த 20 நாட்களாக தினசரி பாசிட்டிவிட்டி ரேட் 1 சதவீதத்திற்கு கீழ் உள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழகம், ஒடியா, மிசோரம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் சில மாவட்டங்களில் நவம்பர் 26 ஆம் தேதியுடன் ஒப்பிடும் போது டிசம்பர் 3 ஆம் தேதி கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளனர்.

திருவனந்தபுரம்

திருவனந்தபுரம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமிக்ரான் இருக்கிறதா என்பதை கண்டறியும் உத்தரவிடப்பட்டது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் (11.61%), வயநாடு (11.25%), கோழிக்கோடு (11%) மற்றும் கோட்டயத்தில் (10.81 %) என கொரோனா பாசிட்டிவிட்டி ரேட்டாநது 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. அது போல் ஒரு வாரத்தில் திருச்சூரில் 128 பேரும் மலப்புரத்தில் 109 பேரும் கோழிக்கோட்டில் 82 பேரும் கொல்லத்தில் 17 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம்

தமிழகம்

கர்நாடகாவை எடுத்துக் கொண்டால் தும்கூரு, தர்வாத், பெங்களூர் நகர்ப்புறம், மைசூரு ஆகிய மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் வாராந்திர கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்த மாவட்டங்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
India crosses half way mark in full doses, says Health Ministry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X