டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாலருக்கு நோ.. ஈரானிடம் இருந்து ரூபாய் மூலம் எண்ணெய் வாங்கும் இந்தியா.. அமெரிக்கா அதிர்ச்சி!

ஈரானில் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    டாலருக்கு இந்திய வச்ச செக்... ஈரானிடம் ரூபாயில் என்னை வாங்க முடிவு

    டெல்லி: ஈரானில் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த இருக்கிறது.

    ஈரானில் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறியுள்ளது. ஈரானிடம் இருந்து எண்ணெய் பொருட்கள் வாங்கும் தடையில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்காவின் நட்பு நாடுகள், ஈரானில் இருந்து எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்ய கூடாது என்று அமெரிக்கா தடை விதித்து இருக்கிறது. இதில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மாந்த்ரீக சக்தி அதிகரிக்க 3 வயது சிறுமி நரபலி.. புதுக்கோட்டையில் மந்திரவாதி பெண் கைது மாந்த்ரீக சக்தி அதிகரிக்க 3 வயது சிறுமி நரபலி.. புதுக்கோட்டையில் மந்திரவாதி பெண் கைது

    எப்படி வாங்கி வந்தது

    எப்படி வாங்கி வந்தது

    இதுவரை இந்தியா பிற எண்ணெய் வள நாடுகளிடம் இருந்து டாலரில் எண்ணெய் பொருட்கள் வாங்கி வந்தது. ஈரானிடம் இருந்து ரூபாயிலும், யூரோவிலும் வாங்கி வந்தது. 55 சதவிகிதம் யூரோ கொடுத்தும் 45 சதவிகிதம் இந்திய ரூபாய் கொடுத்தும் இந்தியா எண்ணெய் வாங்கி வந்தது.

    இனி என்ன

    இனி என்ன

    இனி வரும் சமயங்களில் ஈரானுடன் டாலர் மற்றும் யூரோ இரண்டிலும் இந்தியா வர்த்தகம் செய்யாது. அதற்கு பதிலாக 100 சதவிகிதம் இந்திய ரூபாய் மூலமே எண்ணெய் பொருட்கள் வாங்க இந்தியா திட்டமிட்டு இருக்கிறது. இந்த பணத்தை ஈரான் இந்தியாவிடம் இருந்து எதிர்காலத்தில் பொருட்களை இறக்குமதி செய்ய பயன்படுத்தும்.

    நல்லது

    நல்லது

    இதன் காரணமாக இந்தியா ரூபாய் மதிப்பு கொஞ்சம் முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளது. இந்திய ரூபாய் மீதான தேவை திடீர் என்று அதிகரிக்கும். அப்படி ரூபாய் மீதான தேவை அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியா ரூபாய் மதிப்பும் அதிகம் ஆகும்.

    அமெரிக்கா கோபம்

    அமெரிக்கா கோபம்

    இந்த நிலையில் அமெரிக்கா இதன் காரணமாக இந்தியா மீது கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் இருந்து மட்டுமில்லாமல் மற்ற நாடுகளிடம் இருந்தும் அவர்கள் நாட்டு பணத்திலேயே வர்த்தகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. டாலரை மொத்தமாக புறக்கணிக்க இந்த நாடுகள் முடிவெடுத்துள்ளது. இதனால் அமெரிக்கா பெரிய அதிர்ச்சியிலும் கோபத்திலும் உள்ளது.

    English summary
    India decides to buy oil from Iran using Rupee hereafter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X