டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது சிக்கலில் சிக்கி இருக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    indian economy slowdown after us president trump's made this two decision

    டெல்லி: இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு அமெரிக்க அதிபர் எடுத்த இந்த இரண்டு முக்கிய முடிவுகளை காரணமாக சொல்லலாம். அப்படி என்ன செய்தார் என்பதை இப்போது பார்ப்போம்.

    இந்த கட்டுரை தொடங்கும் முன் ஒரு முக்கியவிஷயத்தை சொல்லிவிடுவோம். இந்தியா உள்பட எந்த ஒரு நாடும் ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை குறைத்தால் தான் அந்த நாட்டின் பொருளாதாரம் வளரும்.

    அதைதைவிட்டு விட்டு குறைவான காசில் கிடைக்கிறதே என்று நினைத்து உற்பத்தி செய்யாமல் எல்லாவற்றையும் இறக்குமதி செய்தால், மற்ற நாடுகளின் சந்தையாக அந்த நாடு மாறிவிடும். வேலை வாய்ப்பு என்பதே அந்த நாட்டில் இல்லாமல் போய்விடும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.

    சீனா வர்த்தக போர்

    சீனா வர்த்தக போர்

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் , அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்று பிரச்சாரம் செய்து வெற்றி பெற்று அதிபரானார். அவர் அதிபரான உடன் அமெரிக்காவில் விற்கும் பொருட்களை அமெரிக்காவிலேயே தயாரிக்க வேண்டும் என்று கண்டிசன் போட்டார். அப்போது தான் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்கும், பொருளாதாரம் பெருகும் என்று நினைத்து உத்தரவிட்டார். ஆனால் இதை சீனா கொஞ்சுமும் சட்டை செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த டிரம்ப், 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினார்.

    இந்தியாவுக்கு சலுகை ரத்து

    இந்தியாவுக்கு சலுகை ரத்து

    இதற்கு சீனாவும் கடுமையாக பதிலடி கொடுத்தது. இந்த இரண்டு நாடுக்கு இடையேயான வர்த்தக போரில் அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இந்தியாவுக்கு அளித்து வந்த சிறப்பு வர்த்தக சலுகையை டிரம்ப் அண்மையில் நிறுத்தினார். இந்த வர்த்தக போரின் விளைவாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது கடுமையாக சரிந்துள்ளது. இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தையும் இந்த முடிவு பாதித்துள்ளது.

    இந்தியாவுக்கு பாதிப்பு

    இந்தியாவுக்கு பாதிப்பு

    இதேபோல் அமெரிக்க அதிபர் டிரம்ப், அணுகுண்டு சோதனை நடத்துவதாக கூறி ஈரானுக்கு எதிராக எடுத்த பொருளாதார தடை நடவடிக்கையும் இந்தியாவை பாதித்துள்ளது. இந்திய ரூபாயில் பெட்ரோல் வாங்கி வந்த இந்தியா இப்போது அப்படி மற்ற நாடுகளிடம் இருந்து வாங்க முடியாது. டாலரில் தான் வாங்க முடியும். இப்படித்தான் பல நாடுகள் கச்சா எண்ணெய்க்காக தவிக்கின்றன. இதன்காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதுவும் இந்தியாவை கடுமையாக பாதித்துள்ளது.

    வேலையின்மை

    வேலையின்மை

    இந்த இரண்டு நடவடிக்கை மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து குறைவான காசில் வருகிறதே என எண்ணி பல பொருட்களை இறக்குமதி செய்தார்கள். இதன் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவில்லை. உற்பத்தி இல்லாவிட்டால் வேலை எப்படி இருக்கும். அதனால் வேலையின்மை அதிகரித்து.இப்போது வேலையில்லாததால் மக்கள் வாங்கும் சக்தியையும் இழந்துவிட்டனர். இதையெல்லாம் சரிசெய்தால் மட்டுமே இந்திய பொருளாதாரம் வளரும். இதை செய்ய வேண்டியவர்கள் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

    English summary
    indian economy slowdown after us president trump's made this two decision
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X