டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா லாக்டவுனை தொடர்ந்து இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஜூலை 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தாக்கம் அதிகரித்ததால் நாட்டில் மார்ச் 23-ந் தேதி முதல் அனைத்து சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. பின்னர் லாக்டவுன் காலத்தில் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக விமான சேவைகள் பயன்படுத்தப்பட்டன.

India extends ban on international flights till July 31

இந்த நிலையில் மே மாதம் இறுதியில் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. ஆனால் சர்வதேச விமான சேவைகள் இயக்கப்படவில்லை. அப்போது ஜூலை 15-ந் தேதி வரை சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதா; சட்டத்தை மீறுவது ஏன்: கனிமொழி கேள்வி!கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதா; சட்டத்தை மீறுவது ஏன்: கனிமொழி கேள்வி!

தற்போது இந்த தடை மேலும் 15 நாட்களுக்கு அதாவது ஜூலை 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. உள்நாட்டு விமான சேவைகளை 33%-ல் இருந்து 45% ஆக அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

English summary
The ministry of civil aviation on Friday extended the ban on international flights till July 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X