சர்வதேச விமான சேவைக்கான தடை பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு.. மத்திய அரசு உத்தரவு..!
டெல்லி: நாளுக்கு நாள் தொற்று உயர்ந்து வரும் நிலையில், நாடு முழுவதும் பிப்ரவரி 28-ம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.. இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
உலகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.. இதை ஒருவழியாக சமாளித்து வரும்போது, அதற்குள் கொரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாடு பாதிப்புகளை ஏற்படுத்த துவங்கி விட்டது.. இது உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

பல்வேறு நாடுகளிலும் ஒமிக்ரான் தாக்கம் உள்ளதால், விமான சேவையை முற்றிலும் நிறுத்திவிட்டன.. கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த வருடமே மார்ச் 23-ந் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் விமான சேவைகள் தடை செய்யப்பட்டன..
அதன்பிறகு தொற்றை நீக்க அந்தந்த அரசுகள் மிக தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டன.. பிறகு, தொற்றின் தாக்கம் சற்று தணிந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால், வழக்கமான சர்வதேச விமான சேவை மட்டும் இன்னும் தொடங்கப்படவில்லை... சூழ்நிலைகளுக்கு ஏற்ப விமான சேவை தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது..
கடந்த மாதம் ஒரு அறிவிப்பு வெளியானது.. அதன்படி, ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 15 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட சர்வதேச விமானங்கள் சேவை தொடங்கப்படாது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.. இது தொடர்பாக வெளியாகியிருந்த அந்த அறிவிப்பில், சர்வதேச பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான சரியான தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்" என்றும் கூறியிருந்தது.
3 நாளாச்சு.. முடியல.. கோவையில் குடோனுக்குள் புகுந்த 'மாயாஜால' சிறுத்தை.. பரபரப்பில் மக்கள்
அந்த வகையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு மட்டும் தடை இல்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது... இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் கூறியுள்ளது. இந்திய அரசு அனுமதிக்கும் நாடுகளிலிருந்து மட்டும் விமான சேவை நடைபெறும் என்று சிவில் விமானப் போக்குவரத்து கூறியுள்ளது.