டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்முறையாக ஒன்று கூடிய இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ்... என்ன பேசினார்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் முறையாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகிறது

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகியா நாடுகள் முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்தின. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. சீனா இந்திய எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் இந்த நேரத்தில் பேச்சுவார்த்தை நடந்திருப்பதால் முக்கியமான பேச்சுவார்த்தையாக பார்க்கப்படுகிறது,

ஆன்லைன் வாயிலாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பிரெஞ்சு ஐரோப்பா மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச்செயலாளர் பிரானோயிஸ் டெலாட்ரே மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை செயலாளர் பிரான்சஸ் ஆடம்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்த பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் ஒருவருக்கொருவர் வலுவான இருதரப்பு உறவுகளை உருவாக்குவதையும், அமைதியான, பாதுகாப்பான, வளமான மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதற்கும், மற்றும் அதற்குரிய பலங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் இந்த ஆக்கப்பூர்வமான கூட்டம் நடைபெற்றது.

பக்கவிளைவு.. அதிரவைத்த ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி.. இந்தியாவில் என்ன நிலை.. சீரம் பதில்!பக்கவிளைவு.. அதிரவைத்த ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி.. இந்தியாவில் என்ன நிலை.. சீரம் பதில்!

Recommended Video

    ஒன்று கூடிய இந்தியா - ஃப்ரான்ஸ் - ஆஸ்திரேலியா.. என்ன பேசினார்கள்?

    ஒவ்வொரு வருடம் இந்த உரையாடலை நடத்த மூன்று நாடுகளும ஒப்புக் கொண்டன. . இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் யுக்தி சார்ந்த சவால்கள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து மூன்று தரப்பினரும் விவாதித்தனர், குறிப்பாக கொரோனா தொற்றுநோய் மற்றும் உள்நாட்டு நெருக்கடியை சமாளிப்பது தொடர்பாக பேச்சு நடந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    india, Australia and France on Wednesday held talks for the first time under a trilateral framework with focus on enhancing cooperation in the Indo-Pacific, a region that has been witnessing increasing Chinese military assertiveness.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X